Asianet News TamilAsianet News Tamil

அது என்ன 'பாண்டா தோசை' சென்னையில் கலக்கும் தெருவோர வியாபாரி..!!

தெருவோர வியாபாரி ஒருவர் 'பாண்டா வடிவ தோசையைச்' செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.

street food vendor makes colourful panda dosa video viral
Author
First Published Jul 26, 2023, 1:50 PM IST

தோசை என்பது பலருக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவு ஆகும். தோசையின் எளிமையான மற்றும் மிருதுவான சுவையை பலர் விரும்புகிறார்கள். இதுவரை, நம்மில் பெரும்பாலானோர் வட்ட வடிவ தோசைகளைப் பார்த்துப் பழகிவிட்டோம். தற்போது 'பாண்டா தோசை' உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், மக்களை கவரும் விதமாக சென்னையில், தெருவோர வியாபாரி ஒருவர்  'பாண்டா வடிவ தோசை' செய்து விற்பனை செய்து வருகிறார். இவர் செய்யும் இந்த தோசை வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

இதையும் படிங்க: 73,090 கோடி நிறுவனத்தின் CEO.. இந்தியாவின் பெரும்பணக்காரர்களில் ஒருவரின் மகன்.. யார் தெரியுமா?

பாண்டா தோசை எப்படி?
இளஞ்சிவப்பு நிற தோசை மாவை எடுத்து தவாவில் பரப்புகிறார். பிறகு, பச்சை நிற தோசை மாவை எடுத்து அதிலிருந்து சிறிய வட்ட வடிவில் செய்கிறார். அது நன்கு வெந்ததும் அவர் அதில் கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை பாண்டாவைப் போல செதுக்குகிறார். இறுதியாக தேங்காய் சட்னியுடன் பரிமாறுகிறார். இது குறித்த வீடியேவை நபர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதன் பின்னரே வீடியோ வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னையின் 5 பழமையான ஹோட்டல்கள்.. சிவாஜி முதல் சூர்யா வரை.. பல பிரபலங்களின் ஃபேவரைட் ஸ்பாட்..

இந்த வீடியோவை சுமார் 4.4 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. தற்போது வரை அதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஷேர் பல லைக்குகளையும் கமெண்ட்களையும் பெற்றுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios