ஆரோக்கியத்துக்கு வலிமை சேர்க்கும் 5 கார உணவுகள்..!!
மிளகாய் காரமாக இருந்தாலும், பல முக்கியமான ஊட்டச்சத்துக்களுக்கு அவை நல்ல ஆதாரமாக உள்ளன. பச்சை மிளகாயில் நார்ச்சத்து, ஃபோலேட், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
இந்தியா 'காரமான' உணவுகளுக்கு பெயர் பெற்ற நாடு. தினசரி மூன்று வேளையும் கார சாரமான உணவுகளை உண்பவர்களும் இருக்கின்றனர். சிலருக்கு காரமாக இல்லாமல் சாப்பிடுவது சற்று கடினமாக இருக்கும். இந்திய உணவுகளில் காரத்தை சேர்ப்பதற்கு பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், கந்தாரி மிளகாய் வகைகளை பயன்படுத்துகிறோம்.
அந்தந்த ஊர்களில் விளையும் மிளகாய் வகைகளை எப்படியாவது எல்லா சமையல்களிலும் சேர்த்துவிடுவார்கள். இனிப்பான பொருளை சாப்பிடும் போது கூட, சில காரமான நொறுவகைகளை பக்கத்தில் வைத்து கொண்டு உண்பார்கள். பச்சை மிளகாயின் சுவை காரமாக இருந்தபோதிலும், நார்ச்சத்து, ஃபோலேட், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சட்து போன்ற அத்தியாவச ஊட்டச்சத்துக்கள் அதில் நிரம்பி காணப்படுகின்றன. இதில் வைட்டமின்கள் ஏ, சி, கே, பி6, பொட்டாசியம் மற்றும் மாங்கனீஷியம் போன்ற சத்துக்களும் அதிகளவில் காணப்படுகின்றன. இவ்வாறு மிளகாயுடன் கூடிய 'காரமான' உணவுகளின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
பச்சை மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே, இதை உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மிளகாயில் கலோரிகள் இல்லை என்பது இதன் முக்கிய நன்மை. சாப்பிட்ட மூன்று மணி நேரத்திற்குள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும் உதவுகின்றன. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காரமான உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க; sexual health: உடலுறவில் ஈடுபடாமல் இருந்தால் புற்றுநோய் பாதிப்பு- ஆய்வில் அதிர்ச்சி..!!
பச்சை மிளகாயை உணவில் தவறாமல் சேர்ப்பது கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கிறது. பச்சை மிளகாய் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு பச்சை மிளகாய் அவசியம்.
இரும்புச் சத்தின் களஞ்சியமான பச்சை மிளகாயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், தோல் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. 'காரமான' உணவுகளை உண்பது நமது மனநிலையை மாற்றி, மகிழ்ச்சியாக இருக்கும். இத்தகைய ஹார்மோன்களைத் தூண்டி, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வைத் தற்காலிகமாகப் போக்க உதவுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். கவனமாக இருங்கள், அதிகப்படியான காரமானது சிலருக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். எனவே மிளகாயை அளவாக மட்டுமே சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
இதையும் படிங்க; உடலுறவு முடிந்ததும் உங்களுடைய சிந்தனை எப்படி இருக்கும்?