காலை டிபனுக்கு பாசிப்பருப்பில் இப்படி ஒருமுறை ஊத்தப்பம் செய்து சாப்பிடுங்க.. செமையா இருக்கும்!

Pasi Paruppu Uttapam Recipe : இந்த பதிவில் பாசிப்பருப்பு ஊத்தப்பம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

pasi paruppu uttapam  in tamil moong dal uttapam recipe in tamil mks

இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி தோசை செய்வதற்கு மாவு இல்லையா? வீட்டில் உள்ளவர்களுக்கு காலை உணவாக என்ன செய்து கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 1 கப் பாசி பயிர் இருந்தால், அதில் சுவையான ஊத்தப்பம் செய்து கொடுங்கள். இந்த பாசிப்பயிறு ஊத்தப்பம் சாப்பிடுவதற்கு ரொம்பவே டேஸ்டா இருக்கும் மற்றும் இது செய்வது மிகவும் ஈஸி. முக்கியமாக இந்த ஊத்தப்பம் ஆரோக்கியமானதும் கூட. மேலும் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் பாசிப்பருப்பு ஊத்தப்பம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

பாசி பருப்பு ஊத்தப்பம் செய்ய தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 கப்
கடலை மாவு - 2 ஸ்பூன்
ரவை - 2 ஸ்பூன்
தயிர் - 2 ஸ்பூன் ( கெட்டியானது)
சீரகம் - 1/4 ஸ்பூன்
மிளகு - 1/4 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
சோடா உப்பு - 2 சிட்டிகை
பச்சை மிளகாய் - 2 
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
பாசிப்பருப்பு ஊத்தப்பம் செய்ய முதலில் எடுத்து வைத்த பாசிப்பருப்பை தண்ணீரில் நன்கு கழுவி, பிறகு அதில் தண்ணீர் நிரப்பி சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.  பாசிப்பருப்பு நன்கு ஊறியதும் அதில் இருந்து தண்ணீரை வடிகட்டி, பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் கடலை மாவு, ரவை, தயிர், மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அரைத்த இந்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து,  அதில் சிறிதளவு சோடா உப்பும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு பாத்திரத்தை ஒரு தட்டால் மூடி வைத்து அப்படியே வைத்து விடுங்கள். அப்போதுதான் புளிக்கும். 

சிறிது நேரம் கழித்து அடுப்பில் ஒரு தவாவை வைத்து அதில் எண்ணெய் தடவி தயாரித்து வைத்த மாவை ஒரு கரண்டி எடுத்து ஊத்தப்பம் போன்று அதில் ஊற்றவும். பிறகு அதன் மேல் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்க்கவும். பிறகு அதன் மேல் எண்ணை ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பாசி பருப்பு ஊத்தப்பம் ரெடி. இந்த பாசிப்பருப்பு ஊத்தப்பத்துடன் நீங்கள் கொத்தமல்லி சட்னி அல்லது தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios