Asianet News TamilAsianet News Tamil

Happy New Year 2024 : புத்தாண்டுக்கு குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேட்டா 'இப்படி' செஞ்சு கொடுங்க.. என்ஜாய் பண்ணுவாங்க!

இந்தப் புத்தாண்டிற்கு உங்கள் குழந்தைகளுக்கு சிறிது நேரத்துக்குள்ளேயே செய்யக்கூடிய அசத்தலான சூப்பர் ஸ்னாக்ஸ் குறித்து இங்கு பார்க்கலாம்..

new year 2024 special snacks recipes egg cutlet and mutton vadai recipes in tamil mks
Author
First Published Dec 29, 2023, 4:29 PM IST

இந்தாண்டு புத்தாண்டுக்கு நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால்.., அதற்கு பெஸ்ட் வழி  ‘முட்டை கட்லெட்’ மற்றும் 'மட்டன் வடை' ரெசிபியை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள். இது ஆரோக்கியமான மற்றும் ஈஸியான ஸ்னாக்ஸ் ஆகும். நிச்யமாக உங்கள் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவர்கள். வாங்க இப்போது முட்டை கட்லெட் எப்படி செய்யலாம் என்பதை பாப்போம்.

new year 2024 special snacks recipes egg cutlet and mutton vadai recipes in tamil mks

முட்டை கட்லெட் செய்ய தேவையான பொருள்கள்:

பச்சை முட்டை - 1
வேகவைத்த முட்டை - 4
உருளைக்கிழங்கு - அரை கிலோ
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
தேங்காய் பால் - அரை கப்
மைதா மாவு - 2 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
ரொட்டித்தூள் - தேவையான அளவு
பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் கொடுப்பது என்று குழப்பமா? இந்த ஈஸியான ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க..

முட்டை கட்லெட் செய்முறை: 

  • இதற்கு முதலில், உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து மசித்து எடுத்துக்கொள்ள வேண்டும். 
  • பின் கொத்தமல்லி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். 
  • இதனையடுத்து வேக வைத்து முட்டைகளை இரண்டாக துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். 
  • பிறகு ஒரு சிறிய பவுலில் பச்சை முட்டை ஒன்றரை உடைத்து, அதில் சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் போட்டு நன்கு அடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இவற்றிற்கு பின் மசித்த உருளைக்கிழங்குடன் தேங்காய் பால், வெங்காயம், கொத்தமல்லி, மைதா மாவு போட்டு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். பிறகு அந்த உருண்டையை கையில் வடை போல் கையில்  வட்டமாகத் தட்டி, வெட்டி வைத்த முட்டையை நடுவில் வைத்து மூட வேண்டும். இப்படி ஒவ்வொன்றாக வைக்க வேண்டும். 
  • பிறகு இவற்றை முட்டை கலவையில் முக்கி, ரொட்டித்தூளில் பிரட்டி எடுத்து, கடாயில் எண்ணெய் சூடானதும் அவற்றில் போட்டு எடுக்க வேண்டும். அவ்வளவுதான் இப்போது 
  • சுவையான முட்டை கட்லெட் ரெடி. 

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு பிடித்த டேஸ்டியான 'சிக்கன் நூடுல்ஸ் கட்லெட்' செய்வது எப்படி?

new year 2024 special snacks recipes egg cutlet and mutton vadai recipes in tamil mks

மட்டன் வடை:

மட்டன் வடை செய்ய தேவையான பொருட்கள்:

ஆடு துருவல்/கீமா - 250 கிராம்
பூண்டு, இஞ்சி விழுது
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் -  ¼ தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - ½ தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மட்டன் வடை செய்முறை:

  • ஒரு கப் தண்ணீரை கொதிக்கவைத்து, துண்டு துண்தாக வெட்டப்பட்ட இறைச்சியில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். 
  • சுமார் 10 நிமிடங்கள் அல்லது இறைச்சி மென்மையாக மாறும் வரை கொதிக்க விடவும். 
  • பிறகு, இறைச்சி நன்கு ஆறியதும், அதை ஒரு கிரைண்டரில் சேர்த்து, நன்றாக கெட்டியாக அரைக்கவும்.
  • ஒரு கடாயை எடுத்து 2 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கவும். வெட்டி வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். மென்மையாகும் வரை வதக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
  • ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து, அதில் வெங்காய கலவை, சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள், கறிவேப்பிலை, உப்பு மற்றும் கொத்தமல்லி இலைகளுடன் இறைச்சியை சேர்க்கவும்.
  • இவை அனைத்தையும் கலந்து சிறிய உருண்டைகளாக உருவாக்க வேண்டும். இந்த உருண்டைகளை தட்டையாக தட்டி வடை வடிவில் மாற்ற வேண்டும். மிதமான தீயில் எண்ணெய் சூடானதும் இவற்றை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்தெடுக்க வேண்டும். அவ்வளவுதான் இப்போது சுவையான மட்டன் வடை ரெடி! இதனை புதினா சட்னி அல்லது உங்களுக்கு பிடித்த சாஸுடன் சூடாக சாப்பிடுங்கள்.
Follow Us:
Download App:
  • android
  • ios