உங்கள் குழந்தையின் மதிய உணவிற்கு பிரியாணி சுவையில் சத்தான 'கொண்டைக்கடலை சாதம்' ரெசிபி..!
உங்கள் குழந்தைகளுக்கு புரோட்டீனை அள்ளிக் கொடுக்கும் சுவையான மதிய உணவு 'கொண்டைக்கடலை சாதம்'. ரெசிபி இங்கே...
பொதுவாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவாக சாம்பார் சாதம், பருப்பு சாதம், லெமன் சாதம், கீரை சாதம் மற்றும் தயிர் சாதம் போன்றவை தான் கொடுப்பார்கள். ஆனால், இவற்றை சாப்பிட்டு அலுத்துப்போன உங்கள் குழந்தைகளுக்கு சற்று வித்தியாசமாகவும், அதேசமயம் ருசியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் ரெசிபி தான் 'கொண்டைக்கடலை சாதம்'. வாங்க இப்போது இந்த கொண்டைக்கடலை சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 1/2 கப்
பாஸ்மதி அரிசி - 1கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பிரியாணி இலை - 1
கிராம்பு - 4
இலவங்கப்பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 3
பெருஞ்சீரகம் - 1/4 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சனா மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் - தேவையான அளவு
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு பிடித்த டேஸ்டியான 'சிக்கன் நூடுல்ஸ் கட்லெட்' செய்வது எப்படி?
செய்முறை:
- முதலில் கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். காலை எழுந்தவுடன் அதில் இருக்கும் தண்ணீரை வடிகட்ட வேண்டும்.
- பிறகு பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
- இதனை அடுத்து பிரஷர் குக்கரில் எண்ணெயை சூடாக்கி, பிரியாணி இலை, ஏலக்காய், இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம், கிராம்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றுடன்
- பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து கோல்டன் நிறம் வரும் வரை வதக்கவும்.
- பின்னர் இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- இப்போது மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்க்கவும். நன்றாக கிளற வேண்டும். இவற்றுடன் சனா மசாலா தூள் சேர்க்கவும்.
- மசாலா வாசனை போன பின், நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தக்காளி வேகும் வரை அவ்வப்போது கிளறவும்.
- இப்போது புதினா இலைகள், கொத்தமல்லி இலைகள் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- பிறகு ஊறவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின் அரிசியைச் சேர்க்கவும். 1 கப் அரிசிக்கு 1.5 தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும் வரை மூடி வைக்கவும்.
- இப்போது பிரியாணி சுவையில் சுவையான கொண்டைக்கடலை சாதம் ரெடி..!!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D