ஐயர் வீட்டு பருப்பு சாதம்.. ஒருமுறை இப்படி வீட்ல செஞ்சி பாருங்க.. டேஸ்டா இருக்கும்..!
Iyer Veetu Paruppu Sadam : இந்த கட்டுரையில் ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் எப்போதும் மதிய உணவாக ஒரே மாதிரி ரெசிபி செய்து போர் அடித்து விட்டதா..? அப்படியானால் உங்களுக்கான பதிவு தான் இது. இன்று மதியம் நீங்கள் உங்கள் வீட்டில் பருப்பு சாதம் செய்து சாப்பிடுவது ஆனால் எப்போதும் போல் அல்லாமல், ஒரு முறை ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்து சாப்பிடுங்கள். இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.
முக்கியமாக இது உடலுக்கு நல்ல சத்துக்களை வழங்கும். இந்த பருப்பு சாதத்தை நீங்கள் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கூட மதிய உணவிற்கு டிபன் பாக்ஸில் அடைத்துக் கொடுங்கள். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: வீடே மணக்கும் ஐயங்கார் ஸ்டைலில் முருங்கைக்காய் சாம்பார்.. ரெசிபி இதோ!
ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி - 1/4 கிலோ
துவரம் பருப்பு - 200 கிராம்
சீரகம் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
மிளகு - 10
மிளகாய் - 1
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 4
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
நல்லெண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: ஐயங்கார் ஸ்டைலில் ருசியான வத்தல் குழம்பு.. ரெசிபி இதோ..!
செய்முறை:
- ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்யும் முதலில், எடுத்து வைத்து அரிசியையும் பருப்பையும் நன்கு கழுவி ஊற வைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை அடுத்து அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் தேவையான நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம், கடுகு போட்டு தாளிக்கவும்.இதனுடன் மிளகையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- அடுத்து அதில் பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், பூண்டு, கருவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். ஓரளவு வதங்கியதும் அதில், சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் பொடியாக நறுக்கி வைத்த தக்காளியையும் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
- பிறகு ஏற்கனவே ஊற வைத்த அரிசியையும் பருப்பையும் இதில் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடுங்கள். பின் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையையும் தூவி குக்கரை மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கி விடவும். விசில் போனதும் குக்கரில் மூடியை திறந்து சிறிதளவு நெய் விட்டு கிளறி விடுங்கள். அவ்வளவுதான் ருசியான ஐயங்கார் வீட்டு கருப்பு சாதம் ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D