மதியம் மிச்சமான சாதம் இருக்கா?!மொறுமொறுப்பாக இப்படி வடை செஞ்சு பாருங்க.. ரெசிபி இதோ.. !
இந்த பதிவில் மதியம் மீந்துப் போன சாதத்தில் எப்படி மெதுவடை செய்யலாம் என்று பார்க்கலாம்.
மாலை வேளையில் காபி டீ குடிக்கும் போது சூடாகவும், காரசாரமாகவும் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா..? உங்க வீட்டில் மதியம் சமைத்த சாதம் இருக்கிறதா..? அப்படியானால் அதைக் கொண்டு டேஸ்ட்டான மெதுவடை செய்து சாப்பிடுங்கள்.
என்ன சாதத்தில் மெது வடையா? என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? இந்த வடை உளுந்து மாவு கொண்டு செய்வது போலவே சாப்பிடுவதற்கு மென்மையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும். முக்கியமாக இந்த வடை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் அதன் சுவை இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் மதியம் மீந்துப் போன சாதத்தில் எப்படி மெதுவடை செய்யலாம் என்று பார்க்கலாம்.
இதையும் படிங்க: வெறும் 10 நிமிடத்தில் மொறு மொறு வெங்காய வடை.. இப்படி செஞ்சு அசத்துங்க!
சாதத்தில் வடை தேவையான பொருட்கள்:
சாதம் - 1 கப்
அரிசி மாவு - தேவையான அளவு
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1(பொடியாக நறுக்கியது)
கருவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: ஈவினிங் ஸ்நாக்ஸாக சூடாகவும் சுவையாகவும் 'ஜவ்வரிசி வடை' செஞ்சி சாப்பிடுங்க.. ரெசிபி இதோ!
செய்முறை:
இந்த வடை செய்ய முதலில் எடுத்து வைத்த சாதத்தை மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் தெளித்து மென்மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அரைத்த இந்த சாதத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.. மாவானது வடை மாவு பதத்திற்கு வரும் வரை அதில் தேவையான அளவு அரிசி மாவை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
இப்போது அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் வடை பொறித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த மாவை கையில் தட்டி, நடுவே ஒரு துளையிட்டு எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் அருமையான ருசியில் வடை ரெடி!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D