Kitchen Hacks: சமையலறையில் உங்கள் வேலையை சுலபமாக்கும் 7 அசத்தல் டிப்ஸ்
இந்த எளிய மற்றும் அசத்தலான சமையலறை டிப்ஸ்களைப் பயன்படுத்தி உங்கள் வேலைகளை சுலபமாக்குங்கள். எந்த வகை சாப்பிங் போர்டு பாதுகாப்பானது? மரமா அல்லது பிளாஸ்டிக்கா?

சாப்பிங் போர்டு நழுவாமல் இருக்க சூப்பர் ஐடியா இருக்கே.!
சாப்பிங் போர்டு பயன்படுத்தும்போது நழுவி நகராமல் இருக்க, அதன் அடியில் ஈரமான பேப்பர் டவல் அல்லது துணியை விரித்து வையுங்கள். இது போர்டை நிலையாக வைத்திருப்பதுடன், காய்கறிகளை பாதுகாப்பாகவும் எளிதாகவும் நறுக்க உதவும்.
பூண்டை ஈசிாய தோல் உரிக்கலாம்
பூண்டின் தோலை ஒவ்வொன்றாக உரிப்பதற்கு அதிக நேரம் செலவிட வேண்டாம். பூண்டு பற்களை ஒரு மூடியுள்ள கிண்ணத்தில் போட்டு, சில நிமிடங்கள் நன்றாகக் குலுக்குங்கள். தோல்கள் தானாகவே பிரிந்து, பூண்டை எளிதாக உரிக்கலாம்.
விதை எடுப்பது ரொம்ப சுலபம்
செர்ரி, திராட்சை போன்ற சிறிய பழங்களில் உள்ள விதைகளை நீக்க கத்தியைப் பயன்படுத்த வேண்டியதில்லை. ஒரு ஸ்ட்ராவை பழத்தின் அடிப்பகுதியில் இருந்து மெதுவாகச் செலுத்தினால், விதையை மறுபுறம் தள்ளி எளிதாக வெளியேற்றலாம். இதனால் பழத்தின் வடிவமும் பெரும்பாலும் மாறாமல் இருக்கும்.
எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்களில் அதிக சாறு கிடைக்கும்
எலுமிச்சை, ஆரஞ்சு பழங்களில் இருந்து அதிக சாறு பெற ஒரு எளிய டிப்ஸைப் பின்பற்றலாம். பழங்களை மைக்ரோவேவில் 5 முதல் 7 விநாடிகள் மட்டும் சூடுபடுத்திவிட்டு, பின்னர் பிழியுங்கள். இதனால் பழத்தின் உள்ளே உள்ள சாறு எளிதாக வெளியேறி, வழக்கத்தைவிட அதிக சாறு கிடைக்க உதவும். சூடாக இருப்பதால் கவனமாகக் கையாளுங்கள்.
பன்னீரை சாஃப்ட் ஆக்கலாம் தெரியுமா?
பன்னீர் சமைக்கும்போது கடினமாகவும் ரப்பர் போன்றும் மாறுகிறதா? இதைத் தவிர்க்க ஒரு எளிய வழி உள்ளது. பன்னீர் துண்டுகளை கொதிக்கும் நீரில் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்து பயன்படுத்துங்கள். இதனால் பன்னீர் மீண்டும் மிருதுவாக மாறுவதுடன், சமைக்கும்போதும் நல்ல சுவையையும் தரும்.
தோல்கள் தரும் சுத்தம்
கத்தி, ஃபோர்க் போன்ற சமையலறை உபகரணங்களில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுக்கை நீக்க எலுமிச்சைத் தோல்களைப் பயன்படுத்தலாம். எலுமிச்சைத் தோலைக் கொண்டு பாத்திரங்களின் மேற்பரப்பை நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். இதில் உள்ள இயற்கையான சிட்ரிக் அமிலம் எண்ணெய் பிசுக்கை அகற்ற உதவுவதுடன், துர்நாற்றத்தையும் குறைக்க உதவும்.
பளபளப்பாக மாறும் கண்ணாடி பாத்திரங்கள்
கண்ணாடி டம்ளர்கள் மற்றும் பாத்திரங்களில் படிந்திருக்கும் நீர்க்கறை, மங்கலான படிவங்களை நீக்க வினிகர் உதவும். ஒரு பாத்திரத்தில் சம அளவு வினிகர் மற்றும் தண்ணீர் கலந்து, அதில் கண்ணாடிப் பொருட்களை 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் மென்மையான துணியால் துடைத்து சுத்தமான தண்ணீரில் கழுவினால், கண்ணாடிப் பாத்திரங்கள் மீண்டும் பளபளப்பாக மாறும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.













