Asianet News TamilAsianet News Tamil

காஷ்மீரி மட்டன் ரோஹன் ஜோஷ் செய்து பாருங்க! ஒரு சொட்டு கூட மிஞ்சாது!

வாருங்கள்! காஷ்மீரி ஸ்பெஷல் மட்டன் ரோஹன் ஜோஷ் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to prepare Mutton Rohan Josh Recipe in Tamil
Author
First Published Mar 27, 2023, 3:08 PM IST

மட்டன் ரெசிபிஸ் அனைத்தும் மிகவும் சுவையானதாக இருக்கும். மட்டன் வைத்து பிரியாணி, கிரேவி, குழம்பு, சுக்கா,சூப் என்று பல விதமான மட்டன் ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த வகையில் இன்று நாம் சற்று வித்தியாசமாக காஷ்மீரி ஸ்டைலில் மட்டன் ரெசிபியை காண உள்ளோம்.

காஸ்மீரி ஸ்பெஷல் மட்டன் ரோகன் ஜோஷ் என்ற உணவு காஷ்மீரில் மட்டுமல்லாமல் உலக புகழ்ப் பெற்றது. இது காஷ்மீரின் பிரசித்தி பெற்ற ஒரு உணவு வகையாகும். இந்த ரெசிபியை வீட்டிற்கு வரும் கெஸ்ட்ட்டுக்கு ஒரு முறை செய்து கொடுத்தால் அவர்களின் அன்பையும் ,பாராட்டையும் உறுதியாக பெறலாம்.

வாருங்கள்! காஷ்மீரி ஸ்பெஷல் மட்டன் ரோஹன் ஜோஷ் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

மட்டன் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி பியூரி - 1/4 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்
சீரகத் தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு
உப்பு - தேவையான அளவு.

தாளிப்பதற்கு:

பட்டை - 2
பிரிஞ்சியிலை-2
ஏலக்காய் -2
லவங்கம் -2
எண்ணெய் - தேவையான அளவு

ராகு காலத்தில் இதை செய்தால் போதும்! கண் திருஷ்டி அனைத்தும் காணாமல் போகும்!

செய்முறை:

முதலில் மட்டனை சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் மல்லித்தழையை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின், பட்டை,ஏலக்காய் ,கிரவு மற்றும் பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கி கண்ணாடி பதம் வந்த பிறகு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.

அடுத்தாக அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் சேர்த்து 2 க்ளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து சுமார் 8விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். 8 விசிலுக்கு பின் பிரஷர் அடங்கிய பின் குக்கரை திறந்து அதில் கரம் மசாலா தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள் மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி விற்று பின் தக்காளி பியூரியை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

மசாலாவும் மட்டனும் நன்றாக சேர்ந்து கொதித்து வந்து கிரேவி கட்டியான பின் அடுப்பில் இருந்து குக்கரை இறக்கி இறுதியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவி பரிமாறினால் டேஸ்ட்டான மட்டன் ரோகன் ஜோஷ் ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios