கடாய் டிஷ் இது ஒரு புது ரகம் "கடாய் மஷ்ரும்"! வாங்க பார்க்கலாம்
இன்று நாம் சுவையான கடாய் மஷ்ரும் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காண உள்ளோம்.
கடாய் கோபி,கடாய் சிக்கன்,கடாய் பன்னீர் போன்ற உணவுகளை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள்.அந்த வகையில் இன்று நாம் சுவையான கடாய் மஷ்ரும் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காண உள்ளோம்.
சைவ வகையான மஷ்ரும் அசைவ உணவகளுக்கு நிகரான ஒரு சுவையை தரக்கூடியது. இந்த ரெசிபியை சப்பாத்தி, பரோட்டா, நாண் போன்றவற்றிற்கு வைத்து சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்.மேலும் இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
மஷ்ரூமில் பல விதமான தாதுக்களான பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு, பொட்டசியம் ,செலீனியம் போன்றவை நிறைந்து காணப்படுவதால், இது நமது உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கிய நலனை தரும் மஷ்ரும் வைத்து சுவையான கடாய் மஷ்ரும் செய்வதை பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
மஷ்ரும் - 1 கப் (பொடியாக அரிந்தது)
பெரிய வெங்காயம் - 1/2 கப் (பொடியாக அரிந்தது)
இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்
தக்காளி - 2
கேப்ஸிகம் - 1/2 (அரிந்தது )
கரம் மசாலா - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பிரெஷ் க்ரீம் - 3ஸ்பூன்
மல்லித்தழை - கையளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் - 2
தனியா விதை - 2 ஸ்பூன்
செட்டிநாடு ஸ்பெஷல் கற்கண்டு வடை! இப்படி செய்து பாருங்க
செய்முறை:
முதலில் மஷ்ரூமை நன்றாக அலசி விட்டு, சுத்தம் செய்து,சிறிய துண்டுகளாக அரிந்துக் வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் சேர்க்காமல், காய்ந்த மிளகாய், தனியா விதைகள் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொண்டு, அதனை குளிர செய்து,பின் 1 மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் ஒரு அதே கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின்,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட்டு, பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிவிட்டு,பின் அரைத்து வைத்துள்ள பவுடர் சேர்த்து கிளறி விட வேண்டும். அடுத்து மிக்சி ஜாரில் தக்காளி சேர்த்து பேஸ்ட் செய்து அதனை கடாயில் போட்டு,அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட்டு, பின் அதில் கரம் மசாலா,சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
அடுப்பில் பான் வைத்து,அதில் எண்ணெய் ஊற்றி, அதில் கேப்ஸிகம், வெங்காயத்தை சேர்த்து வதக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதே கடாயில் மஷ்ருமை போட்டு 2 நிமிடம் வதக்கிக் கொண்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு வதக்கிய மஷ்ருமை கொதிக்கும் கிரேவியில் சேர்த்து மஷ்ருமை சேர்த்து வேக வைக்க வேண்டும்.
மஷ்ரும் நன்றாக சாஃப்ட்டாக வெந்த பிறகு, இப்போது வதக்கி வைத்துள்ள கேப்ஸிகம்சேர்த்தி நன்றாக கிளறி விட்டு, பின் இறுதியாக பிரெஷ் க்ரீம் மற்றும் மல்லித்தழை சேர்த்து இறக்கி விட்டால் சுவையான கடாய் மஷ்ரும் ரெடி!