ஆல் இன் ஒன் க்ரீன் சிக்கன் கிரேவி செய்யலாமா ?

ஆல் இன் ஒன் க்ரீன் கிரேவியை வீட்டில் சுவையாகவும், எளிமையாகவும் எப்படி செய்வது எண்டு இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to prepare Chicken Green Gravy in Tamil

அசைவ பிரியர்களுக்கு பிடித்த வகை என்றால் சிக்கன் தான் முதலிடமாகும். இதில் அதிகமாக புரோட்டீன் உள்ளதால் உடலுக்கு நன்மையை தருகிறது. சிக்கன் வைத்து பல விதமான உணவு வகைகளை செய்து சுவைத்திருப்போம். அந்த வகையில் இன்று நாம் ஒரு டிஃபரென்டான ரெசிபியான க்ரீன் சிக்கன் கிரேவியை பார்க்க உள்ளோம்.

இதனை புலாவ் , நாண், சப்பாத்தி,பரோட்டா மற்றும் சாதம் என அனைத்திற்கும் வைத்து சாப்பிடும் வகையில் ஆல் இன் ஒன் கிரேவி என்றும் கூறலாம்.மேலும் இந்த க்ரீன் சிக்கனை வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இதன் சுவை அருமையாக இருக்கும். இந்த ஆல் இன் ஒன் க்ரீன் கிரேவியை வீட்டில் சுவையாகவும், எளிமையாகவும் எப்படி செய்வது எண்டு இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: 

சிக்கன் - 1 கிலோ 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பிரியாணி இலை - 1 
சோம்பு - 1/2 ஸ்பூன்
மல்லித் தூள் - 2 ஸ்பூன் 
மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
சீரகத் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு-2 ஸ்பூன்
தயிர் - 1/4 கப் 
தேங்காய் பால் - 1/4 கப் 
எண்ணெய் -தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 

அரைக்க தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 3 
பச்சை மிளகாய் -3
புதினா - 1/2 கட்டு 
மல்லித்தழை - 1 கட்டு
இஞ்சி - 1 1/2 இன்ச் 
பூண்டு - 7-8 பல்

மதுரையின் பிரசித்தி பெற்ற முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு செய்யலாம் வாங்க!

செய்முறை:

முதலில் சிக்கனை நன்றாக அலசிக்கொண்டு, பின் அதில் உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு பிரட்டி கொண்டு கிட்டதட்ட 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அடுத்து ஒரு மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய்,புதினா, மல்லித்தழை, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து,அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு சோம்பு மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் பொடியாக வெட்டிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். அடுத்து அதில், அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை நன்றாக வதக்கி விட வேண்டும். 

வதக்கிய பின்பு அதில் சீரகத் தூள்,மஞ்சள் தூள்,மல்லித் தூள், கரம் மசாலா தூள் மற்றும் தயிர் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். இப்போது ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து குறைந்த பட்சம் 5 நிமிடங்கள் வதக்கி விட்டு, பின் அதனுடன் சிறிது உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறி விட்டு மூடி போட்டு சிக்கனை நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். 

சிக்கன் நன்றாக வெந்த பிறகு தேங்காய் பால் ஊற்ற வேண்டும். இப்போது அடுப்பினை சிம்மில் வைத்து சிக்கன்னை நன்றாக கிளறி விட்டு சுமார் 3 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால், சூப்பரான மற்றும் சுவையான ஆல் இன் ஒன் க்ரீன் சிக்கன் கிரேவி ரெடி!!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios