Asianet News TamilAsianet News Tamil

ஈவினிங் ஸ்னாக்ஸ்க்கு சுவையான சுண்டல் சாட் செய்யலாம் வாங்க!

அனைவருக்கும் ஏற்ற ஒரு ரெசிபியான சுண்டல் சாட் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க!

How to prepare Chana Chaat in Tamil
Author
First Published Nov 24, 2022, 6:18 PM IST

தினமும் மாலை நேரங்களில் சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸிற்கு இன்று சத்தான சுண்டல் சாட் செய்து சாப்பிடலாமா? வழக்கமாக புட்டு ,வடை, போண்டா, பஜ்ஜி என்றில்லாமல், கொஞ்சம் வித்தியாசமாக, சுவையாக அதே நேரத்தில் ஆரோக்கியமான ஒரு ரெசிபி செய்ய வேண்டுமா? 

அப்படி என்றால் இந்த சுண்டல் சாட் செய்து கொடுங்க . அனைவருக்கும் ஏற்ற ஒரு ரெசிபியான சுண்டல் சாட் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க!

தேவையான பொருட்கள்:

சுண்டல் - 1 கப் 
சீரகம்-1/2 ஸ்பூன் 
பெருங்காயத் தூள்- 1 சிட்டிகை 
பிளாக் சால்ட்-1/2 ஸ்பூன் 
கரம் மசாலா-1/2 ஸ்பூன் 
தனியா தூள்-1 ஸ்பூன் 
சாட் மசாலா-1/2 ஸ்பூன் 
மிளகாய்த்தூள்-1 ஸ்பூன் 
சீரகத்தூள்-1/2 ஸ்பூன் 
உப்பு- தேவையானஅளவு 
எண்ணெய் - தேவையானஅளவு 

உடலுக்கு வலிமை சேர்க்கும் "முருங்கைக்காய் மசாலா"செய்வது எப்படி ? பார்க்கலாம் வாங்க!

அலங்கரிக்க: 

வெங்காயம்-1/2 கப் 
தக்காளி-1/2 கப் 
புதினா-10 இலைகள் 
கொத்தமல்லி -கையளவு 
எலுமிச்சை சாறு-1/2 ஸ்பூன் 

செய்முறை:

முதலில் சுண்டலை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி சுமார் 8 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.பின் அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் சுண்டலை சேர்த்து தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, 7 விசில் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும். 

7 விசில் வரை வெந்த பிறகு,சுண்டலை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி, புதினா, மல்லித்தழை ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் 1 கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின், சீரகம்,பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பின் தீயினை சிம்மில் வைத்துக் கொண்டு பின் அதில் மிளகாய் தூள், சீரகத்தூள், தனியா தூள், சாட் மசாலா,பிளாக் சால்ட் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து விட்டு,சுண்டல் வேக வைத்த தண்ணீர் கொஞ்சம் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். 

கலவை கொதித்து கெட்டியாக மாறிய பின் அடுப்பை ஆஃப் செய்து விட்டு, சுண்டலை ஆற வைத்து விட்டு, ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, பொடியாக அரிந்த மல்லித்தழை மற்றும் புதினா சேர்த்து அலங்கரிக்க வேண்டும். 

பின் கலவையின் மேற்பரப்பில் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டால் சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் சுண்டல் சாட் ரெடி!!!

Follow Us:
Download App:
  • android
  • ios