Asianet News TamilAsianet News Tamil

Carrot Halwa : தித்திப்பான கேரட் ஹல்வா !செய்யலாம் வாங்க!

கேரட் ஹல்வா. எண்ணில் அடங்கா பயன்களை தரும் கேரட் வைத்து தித்திப்பான அல்வா செய்யலாமா?
 

How to prepare Carrot halwa in Tamil
Author
First Published Oct 26, 2022, 4:55 PM IST

கேரட்டை குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்களா? அப்படியென்றால் இப்படி செய்து தாருங்கள். குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை தித்திப்பாக இயக்கும்.என்ன ரெசிபி? என்று தெரியவில்லையா? கேரட் ஹல்வா. எண்ணில் அடங்கா பயன்களை தரும் கேரட் வைத்து தித்திப்பான அல்வா செய்யலாமா?

கேரட்டை காய்கறிகளின் ராணி என்றும் அழைப்பர். கேரட் வைத்து, பொரியல்,சாம்பார், குருமா என்று பல வகையான ரெசிபிஸ் செய்யலாம்.தொடர்ந்து கேரட்சாப்பிட்டால் கண்பார்வை சிறப்பாக இருக்கும். ஜொலிஜொலிப்பன சருமத்தை பெறமுடியும். மேலும் இதில் குறைந்த அளவு கொழுப்பு சத்து கொண்டது. இன்னும் பல வகையான நன்மைகளை நமக்கு அளிக்கின்ற கேரட் வைத்து ஒரு அசத்தலான இனிப்பான ஹல்வாவை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கேரட் ஹல்வா செய்ய தேவையான பொருட்கள்:

கேரட் – 1/4 கிலோ 
பால் –1/4 லிட்டர் 
சர்க்கரை – 300 கிராம்
நெய் – 50 கிராம் 
கேசரி பவுடர் – 1 சிட்டிகை 
ஏலக்காய் தூள் – ஒரு ஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 10 

Diwali Legiyam: தீபாவளி திண்பண்டங்களால் உண்டாகும் செரிமானப் பிரச்னைகளைத் தடுக்கும் சூப்பரான லேகியம்!

செய்முறை:

முதலில் கேரட்டின் தோல் சீவி எடுத்து அதனை நன்றாக அலசி கொண்டு தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கழுவி வைத்துள்ள கேரட்டை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து பால் ஊற்ற வேண்டும்.பாலில் துருவி வைத்துள்ள கேரட் சேர்த்து அடுப்பின் தீயை சிம்மில் வைத்து ,கொதிக்க வைக்க வேண்டும். 

கேரட் நன்கு குழைந்து வெந்து வரும் போது,கெட்டியாக மாறும். சர்க்கரையை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின் பொடித்த சர்க்கரையை கலவையில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். ஹல்வா பதம் வரும் வரை தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின் அதில் நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கி விட வேண்டும்.

இப்போது அடுப்பில் ஒரு சிறிய pan வைத்து அதில் நெய் சேர்த்து முந்திரியை வறுத்து கொள்ள வேண்டும்.பின் ஏலக்காய் தூள் மற்றும் சிட்டிகை கேசரி பவுடர் சேர்த்து அதனை ஹல்வாவுடன் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். 

அவ்ளோதான் இப்பொழுது தித்திப்பான மற்றும் சத்தான கேரட் அல்வாரெடி! திடீரென வீட்டிற்கு கெஸ்ட் வந்து விட்டால் இதனை உடைபெ செய்து அசத்தி விடலாம். இதை செய்ய வெறும் 1/2 மணி நேரமே போதுமானது. நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்க. நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும். 

Follow Us:
Download App:
  • android
  • ios