Caramel Paysam : வெறும் 10 நிமிடத்தில் சட்டென்று செய்யக்கூடிய கேரமல் பாயசம் ! வாங்க செய்யலாம்
இன்று நாம் தித்திப்பான கேரமல் பாயசத்தை வீட்டில் சுலபமாக எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இனிப்பு வகைகளில் பல விதங்கள் இருந்தாலும், வீட்டில் சட்டென்று உடனடியாக செய்யக் கூடிய இனிப்பு என்றால் அது பாயசம் தான். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு ரெசிபி ஆகும்.
பாயசத்தை திருமண நாள், பிறந்தநாள், விசேஷ நாட்களளில் செய்யலாம்.மேலும் தெய்வங்களுக்கும் நெய்வேத்தியமாகவும், பிரசாதமாகவும் செய்து படைக்கலாம். சேமியா பாயசம், ஜவ்வரிசி பாயசம், ரவை பாயசம், பருப்பு பாயசம் என்று பல விதமான பாயச வகைகள் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் தித்திப்பான கேரமல் பாயசத்தை வீட்டில் சுலபமாக எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/4 கப்
பால் - 200 மில்லி
சர்க்கரை - 4 ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
நெய் - 1 தேவையான அளவு
உளர் திராட்சை - 5
முந்திரி பருப்பு - 5
கேரமல் செய்வதற்கு:
சீனி - 4 ஸ்பூன்
தண்ணீர் - 2 ஸ்பூன்
கிட்ஸ் ஆல் டைம் பேவரைட் - சாக்லேட் பிஸ்கட் பால்ஸ் !!
செய்முறை:
முதலில் பச்சரிசியை கழுவி விட்டு, சுமார் 1 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொண்டு, பின் அதனை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொண்டு, ஒரு மிக்சி ஜாரில் போட்டு , ஒரு சுற்று சுற்றி, எடுத்துக் கொள்ள வேண்டும். (ஒன்றிரண்டாக பொடித்தால் போதுமானது)
அடுப்பில் ஒரு குக்கர் வைத்து ,அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கேரமல் செய்து கொள்ள வேண்டும். கேரமல் கிடைத்த உடன் அதில் ,பொடித்து வைத்துள்ள பச்சரிசியை சேர்த்து கொண்டு நன்றாக கலந்து விட வேண்டும்.
பின் குக்கரில் பால், சிறிது உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து மூடி விட்டு, அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து 3 விசில் வைத்து இறக்கி விட வேண்டும்.
விசில் அடங்கிய பின், குக்கரை திறந்து சர்க்கரை,ஏலக்காய் பொடி தூவி நன்றாக மிக்ஸ் செய்து கொண்டு, கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும்.
அடுப்பில் ஒரு சிறிய பான் வைத்து சிறிது நெய் சேர்த்து, உருகிய பின் முந்திரி பருப்பு, உளர் திராட்சை போட்டு வறுத்துக் கொண்டு, பின் குக்கரில் சேர்த்தால், தித்திப்பான கேரமல் பாயசம் ரெடி!