தர்பூசணி தோல் வைத்து சாம்பார் செய்துள்ளீர்களா! இல்லையா !அப்போ எப்படி செய்வது ? பார்க்கலாம் வாங்க!

வாருங்கள்! சூப்பரான சுவையில் தர்ப்பூசணி சாம்பாரை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Watermelon Rind Sambar in Tamil

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள பல்வேறு விதமான உணவு வகைகளை செய்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இன்று நாம் தர்ப்பூசணி வைத்து அட்டகாசமான ஒரு ரெசிபியை பார்க்க உள்ளோம். இந்த தர்பூசணி உடலின் நீர்ச்சத்தை சமப்படுத்த கோடைகாலங்களில் அனைவராலும் வெகு அதிகமாக சாப்பிடக்கூடிய ஒரு பழம் ஆகும். பொதுவாக தர்பூசணி வைத்து ஜூஸ் தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். தர்பூசணி தோலினை நாம் நீக்கி விட்டு பழத்தை மட்டும் சாப்பிடுவோம். பீர்க்கங்காய் தோல் வைத்து சமைப்பதை பலரும் அறிவர். ஆனால் தர்பூசணியின் தோல் வைத்து சமைக்கலாம் என்பதனை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் இன்று நாம் தர்பூசணி தோல் வைத்து சுவையான சாம்பார் செய்ய உள்ளோம்.

வாருங்கள்! சூப்பரான சுவையில் தர்ப்பூசணி சாம்பாரை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

தர்ப்பூசணியின் தோல் பகுதி - 1 பழத்தின் துண்டுகள்
துவரம் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
மாங்காய் துண்டுகள் - 6
துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
வெந்தயம் -1/4 ஸ்பூன்
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லித்தழை-கையளவு
எலுமிச்சை சாறு - 1/2 பழம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

Kulfi : குளு குளு வென்று "குல்ஃபி ஐஸ்" செய்யலாம் வாங்க!

செய்முறை:

அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் அலசிய துவரம் பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி அதில் சீரகம், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவை சேர்த்து வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். தர்ப்பூசணியின் தோல் பகுதியை ஒரே மாதிரியான அளவில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மாங்காயயையும் ஒரே மாதிரியான அளவில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி, மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின் அதில் வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை, சீரகம் ஆகியவை சேர்த்து தாளித்து பின் அதில் அரிந்த வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் அதில் மாங்காய் துண்டுகள் மற்றும் தர்ப்பூசணி துண்டுகள் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பின் கடாயினை ஒரு தட்டு போட்டு மூடி விட்டு அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து வேக விட வேண்டும்.

சுமார் 5 நிமிடங்கள் கழித்து மிளகாய்த்தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து விட வேண்டும். அடுத்தாக அதில் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சாம்பார் பதம் வந்த பிறகு அதில் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். இறுதியாக துருவிய தேங்காய் , அரிந்து வைத்துள்ள மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறினால் சூப்பரான சுவையில் தர்பூசணி சாம்பார் ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios