Asianet News TamilAsianet News Tamil

காரசாரமான மீன் ஊறுகாயை எப்படி செய்வது என்று தெரியுமா?

வாருங்கள்! காரசாரமான கலர்ஃபுள்ளான நாவூறும் மீன் ஊறுகாய் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Spicy Fish Pickle recipe in Tamil
Author
First Published Mar 23, 2023, 9:53 PM IST

என்ன தான் மதிய நேரத்தில் பல வகையான காய்கறிகளை பல விதங்களில் சமைத்து வைத்து பரிமாறினாலும் சிலர் சிறிது ஊறுகாயையும் கேட்டு வாங்கி மிகவும் ருசித்து சாப்பிடுவார்கள். ஊறுகாயில் பூண்டு ஊறுகாய், தக்காளி ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய் என்று பல விதமான ஊறுகாய்களை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் இன்று நாம் அசைவத்தில் ஒரு வகையான மீன் வைத்து மீன் ஊறுகாய் செய்ய உள்ளோம்.

இதன் நிறமும் ,மணமும் பார்ப்பவர்களை ருசித்த தீர வேண்டும் என்று என்னும் அளவிற்கு இதன் சுவை இருக்கும். மேலும் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை தாறுமாறாக இருக்கும்.

இதனை அப்படியே கொடுத்தாலும் அனைத்தையும் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு தான் அடுத்த வேலைக்கே செல்வார்கள்.

வாருங்கள்! காரசாரமான கலர்ஃபுள்ளான நாவூறும் மீன் ஊறுகாய் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

மீன்-1/2 கிலோ
இஞ்சி-75 கிராம்
பூண்டு-75 கிராம்
கடுகு- 50 கிராம்
சீரகம்-35 கிராம்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் -2 ஸ்பூன்
சர்க்கரை -1 ஸ்பூன்
வினிகர்-200 கிராம்
வர மிளகாய்-50 கிராம்
உப்பு - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்-50 கிராம்
கடலை எண்ணெய்- தேவையான அளவு

உடம்பிலுள்ள கொழுப்பை கரைத்து உடம்பை சிக்கென வைக்க சித்தர்கள் பின்பற்றிய வீட்டு மருத்துவம்!

செய்முறை :
 

முதலில் மீனை அலசி சுத்தம் செய்து அதிலுள்ள முட்களை எடுத்து விட்டு ஒரே அளவிலான துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.அரிந்து வைத்துள்ள மீனில் உப்பும், மிளகாய் தூளும் சேர்த்து சுமார் 1 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை போட்டு ,

அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து , பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தாக ஒரு மிக்சி ஜாரில் வர மிளகாய், கடுகு, சீரகம் ,இஞ்சி, மற்றும் பூண்டு ஆகியவை சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மற்றொரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

மசாலாவில் வாசனை சென்ற பிறகு, சர்க்கரை, மீன் மற்றும் வினிகர்முதலியவை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி விட வேண்டும். அவ்ளோதான்! காரசாரமான மீன் ஊறுகாய் ரெடி! இப்போது வதக்கிய ஊறுகாயை காற்று புகாத மற்றும் ஈரப்பதம் அற்ற டப்பாவில் போட்டு மூடி வைத்து பயன்படுத்தலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios