Asianet News TamilAsianet News Tamil

ஈவ்னிங் ஸ்னாக்ஸிற்கு டேஸ்டியான "ஆலூ போண்டா" செய்யலாம் வாங்க!

வாருங்கள்! ருசியான ஆலூ போண்டாவை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Potato Bonda in Tamil
Author
First Published Dec 27, 2022, 10:36 AM IST

பொதுவாக நம்மில் பலருக்கும் மாலை நேரங்களில் காபி மற்றும் டீ அருந்துகையில்ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாகத் தான் இருக்கிறோம். வழக்கமாக நாம் வடை, கட்லெட்,சமோசா போன்ற ஸ்னாக்ஸ் வகைகளை அதிகமாக சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் வித்தியாசமாக ஒரு ரெசிபியை காண உள்ளோம். 

இந்த ரெசிபியை சுட சுட செய்து சட்னி வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மேலும் எப்போதும் சாப்பிடுகின்ற வடை போன்றவற்றில் இருந்து வித்தியாசமான சுவையில் இருக்கும். இதனை ஒரு முறை ட்ரை செய்து பாருங்க.பின் இதையே அடிக்கடி செய்து தரும்படி வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள்.

மேலும் விருந்தினர்கள், நண்பர்கள் என்று வீட்டில் கெஸ்ட் வந்து விட்டால் இதனை மிக சுலமபாக செய்து அவர்கள் அன்பை பெறலாம். வாருங்கள்! ருசியான ஆலூ போண்டாவை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு-3
கடலை மாவு- 1 கப் 
அரிசி மாவு-2 ஸ்பூன் 
வெங்காயம்-1
இஞ்சி-1 துண்டு 
பச்சை மிளகாய்-2
கடுகு-1/2 ஸ்பூன் 
மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன் 
மிளகாய் தூள்-1/2 ஸ்பூன் 
பேக்கிங் சோடா-1 /2 ஸ்பூன் 
கருவேப்பிலை-1 கொத்து 
மல்லித்தழை -கையளவு 
எண்ணெய்-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு

பூரியை கொஞ்சம் வித்தியாசமாக இப்படி செய்து பாருங்க!

செய்முறை:

முதலில் இஞ்சி, மல்லித்தழை, வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் கறிவேப்பிலையை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.  அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் உருளைக்கிழங்கு சேர்த்து தண்ணீர் ஊற்றி, 3 விசில் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெந்த பிறகு உருளைக்கிழங்கை எடுத்து ஒரு பௌலில் மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்த பிறகு, அதில் கடுகு சேர்த்து தாளித்துக் கொண்டு பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து ,வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி விட வேண்டும்.

பின் அதில்  பொடியாக அரிந்து வைத்துள்ள இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அதை நன்றாக வதக்கி விட வேண்டும்.  அடுத்தாக அதில் மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, கிட்டத்தட்ட 10  நிமிடங்கள் வரை வரை வேக விட வேண்டும். பின் அடுப்பினை ஆஃப் செய்து விட்டு மசாலாவை ஆற வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து கலந்து விட்டு, பின் அதில் பேக்கிங் சோடா,மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து அதை நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் உருளை மசாலாவை எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.  அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பின் அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து விட்டு, உருட்டி வைத்துள்ள கிழங்கு மசாலாவை கடலை மாவில் நன்கு டிப் செய்து போட வேண்டும். 

ஒரு பக்கம் வெந்த பிறகு, மறுபக்கம் திருப்பி விட்டு வெந்த பிறகு எண்ணெய்யை வடிகட்டி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதே போன்று அனைத்து உரலை உருண்டைகளையும் செய்து கொள்ள வேண்டும். அவ்ளோதான் சுவையான உருளை போண்டா ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios