வீட்டில் அவல் இருக்கா? அப்போ காலை ப்ரேக் பாஸ்ட்டுக்கு இப்படி பண்ணி பாருங்க.

ஆரோக்கிய உணவு வகைகளில் அவல் சார்ந்த ரெசிபிகளும் இன்றியமையாத இடம் பெறுகின்றன.உடல் எடையை குறைக்க , எலும்பு வளர்ச்சியை அதிகரிக்க, குடலை பாதுகாக்க, இரத்த சோகையை குணப்படுத்த, சர்க்கரை நோயினை குணப்படுத்த, இன்னும் பல நன்மைகளை நமக்கு தருகின்ற அவலை வைத்து ஈஸியான, டேஸ்டான அவல் பிரைட் ரைஸ் ரெசிபியை எப்படி செய்வது என்பதை இந்த என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம். 

How to make Poha Fried Rice Recipe in Tamil

சத்து நிறைந்த அவல் வைத்து பிரைட் ரைசை 10 நிமிடத்தில் சுவையாக செய்து காலை அல்லது இரவு நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம். தினமும் இட்லி, தோசை, பொங்கல் போன்ற உணவுகளுக்கு மாற்றாக இதனை ட்ரை பண்ணி பார்க்கலாம்.குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக இது உள்ளது. வாங்க! அவல் பிரைட் ரைஸ்! எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

1 கப் தட்டை அவல்
1/4 கப் சிவப்பு நிற குடை மிளகாய்
1/4 கப் மஞ்சள் நிற குடை மிளகாய் 
3பீன்ஸ்
1/2கேரட்
சிறிது கோஸ்
சிறிதளவு வெங்காயத் தாள்
1/2ஸ்பூன் மிளகு தூள்
தேவையானஅளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்

இத்தனை நாள் இது தெரியாம போச்சே! வாழைப்பழத் தோலில் இவ்வளவு நன்மைகளா!

செய்முறை:

அவல் பிரைட் ரைஸ் தயார் செய்வதற்கு அவலை தண்ணீரில் கழுவி வடிகட்டி 10 நிமிடம் ஊற வைக்கவும். 1 கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் குடை மிளகாய்,பீன்ஸ்,கேரட், கோஸ் மற்றும் வெங்காய தாள் சேர்த்து மிதமான சூட்டில் அரை பதமாக வேக வைத்துக் கொள்ளவும் . காய்கறிகள் வதங்கியதும் அதனுடன் ஊறவைத்த அவலையும் சேர்த்து, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து விடவும். எல்லாம் ஒன்றாகக் கலந்ததும் இறுதியாக சிறிது வெங்காயத் தாளையும் சேர்த்து கலந்து விடவும்.. இப்போது சூடான, சுவையான, சத்தான,எளிமையான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற அவல் பிரைட் ரைஸ் ரெடி! 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios