வெஜ்... நான் வெஜ்.... இரண்டிற்கும் சுவையான பிளைன் சால்னா! செய்வோமா?
ரோட்டோர கடைகளில் கிடைக்கும் சால்னாவின் சுவை அருமையாக இருக்கும்.சுலபமான முறையில் இந்த பிளைன் சால்னாவை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
சால்னா பரோட்டாவுக்கும் மட்டுமில்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றிற்கும் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். சால்னாவை பல ஊர்களில் பல ஹோட்டல்களில் வெஜ் சால்னா, பிளைன் சால்னா, கெட்டி சால்னா, சிக்கன் சால்னா என்று பல விதங்களில் செய்வார்கள். ரோட்டோர கடைகளில் கிடைக்கும் சால்னாவின் சுவை அருமையாக இருக்கும்.சுலபமான முறையில் இந்த பிளைன் சால்னாவை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பிளைன் சால்னா செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 2 (மெல்லிதாக நறுக்கியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
ஏலக்காய் – 3
பட்டை – 1 சின்ன துண்டு
கிராம்பு – 4
பிரிஞ்சி இலை – 1
சோம்பு – ½ ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
மல்லித் தூள் – 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா – ½ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
உப்பு – ½ ஸ்பூன்
புதினா-சிறிது
கருவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி தழை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
தேங்காய் விழுது அரைக்க:
தேங்காய் துருவியது – ¼ கப்
சோம்பு – ½ ஸ்பூன்
கசகசா – ½ ஸ்பூன்
முந்திரி பருப்பு – 5
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து சூடான பின்பு, சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
பின் மெல்லிதாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொண்டு வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட்டு ,புதினா, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு வதக்கி விடவும். பின்பு அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாடை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.
அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி விட்டு ,பின் தக்காளி மசிந்த பிறகு , மஞ்சள் தூள்,மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்துக் கொண்டு போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.எண்ணெய் நன்கு பிரிந்து வரும் வரை கொதிக்க விட வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு,முந்திரிப் பருப்பு, துருவிய தேங்காய் மற்றும் கசகசா சேர்த்து சிறிது நீர் சேர்த்து அரைத்துக்கொண்டு அதனை மசாலாவில் சேர்க்கவும்.
பின் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து தீயை மிதமாக வைத்து 20 – 25 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறுதியில் சிறிதளவு மல்லி தழை தூவி இறக்கி வைத்தால் சுவையான பிளைன் சால்னா ரெடி!