வீட்ல பிரட் அண்ட் பன்னீர் இருக்கா? வெறும் 10 நிமிடத்தில் அருமையான சாண்ட்விச் செய்யலாம் வாங்க!
இன்று நாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சூப்பரான பன்னீர் சாண்ட்விச் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும் சாப்பிடுகின்ற டிபன் வகைகளான இட்லி, தோசை, பூரி போன்றவை சாப்பிட்டு போர் அடிக்குதா? கொஞ்சம் வெரைட்டியா,புதுசா செய்து சாப்பிடணும் என்று எண்ணுகிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான் .
சாண்ட்விச் பிடிக்குமா உங்களுக்கு? சாண்ட்விச்சில் வெஜ் சாண்ட்விச், மஷ்ரும் சாண்ட்விச், கார்ன் சாண்ட்விச், சிக்கன் சாண்ட்விச் என்று பல விதமான சாண்ட்விச்கள் உள்ளன. ஒவ்வொரு சாண்ட்விச்சும் ஒவ்வொரு விதமான சுவையை தரும்.
அந்த வகையில் இன்று நாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சூப்பரான பன்னீர் சாண்ட்விச் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
பிரட் – 6 ஸ்லைஸ்கள்
பன்னீர் – 1 கப்
பட்டர் – தேவையான அளவு
வெங்காயம் – 1/2
தக்காளி –1
கேப்ஸிகம் –1/2
டொமேட்டோ சாஸ் – 2 ஸ்பூன்
சில்லி சாஸ் – 2 ஸ்பூன்
புதினா சட்னி – 2 ஸ்பூன்
கரம் மசாலா –2 ஸ்பூன்
சில்லி ஃபிளேக்ஸ்- 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
மல்லி தழை – கையளவு
துருவிய சீஸ் - தேவையான அளவு
சூப்பரான சுவையில் "சில்லி கொத்து சப்பாத்தி" ஈஸியா வீட்டில் செய்யலாம் வாங்க!
செய்முறை:
முதலில் பன்னீரை ஒரே மாதிரியான சிறிய அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு தட்டில் சீஸை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
மல்லித்தழையை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் , தக்காளி, கேப்ஸிகம் போன்றவற்றை அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் 1 பிரட் ஸ்லைஸை எடுத்து அதில் சிறிது பட்டர் போட்டு ஸ்ப்ரெட் செய்து விட வேண்டும். பின் அதன் மீது சில்லி சாஸ் சேர்த்து பரப்பி விட்டு,அடுத்து அதன் மேல் டொமேட்டோ சாஸ் சேர்த்து அதனையும் நன்றாக ஸ்ப்ரெட் செய்து விட வேண்டும்.
இப்போது பிரெட் மீது பன்னீர் துண்டுகளை வைத்து இடையில் மெல்லிய வெங்காயம்,கேப்ஸிகம், தக்காளி ஆகியவற்றை வைத்து,அதன் மீது சீஸ் துருவலை சிறிது தூவி விட வேண்டும்.
சீஸ் தூவிய பிறகு அதன் மேல் சிறிது கரம் மசாலா,மிளகுத்தூள்,புதினா சட்னி,சில்லி ஃப்ளேக்ஸ், மிளகாய் தூள் ஆகியவற்றை தூவி விட்டு இறுதியாக பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித் தழையை சேர்த்து விட வேண்டும். பின் அதனை மற்றொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடி விட்டு, அழுத்தி விட வேண்டும்.
இப்போது அடுப்பின் மேல் ஒரு தோசைக்கல் வைத்து அதில் சிறிது பட்டர் சேர்த்து, ரெடியாக இருக்கும் ஸ்டஃபிங் செய்துள்ள பிரட் ஸ்லைஸ் வைத்து அடுப்பினை சிம்மில் வைத்து,ஒரு புறம் சிவந்த பின் மறு பக்கம் திருப்பி போட்டு சிவக்க செய்து எடுத்தால் சூப்பரான பன்னீர் சாண்ட்விச் ரெடி!!!
ஒருமுறை செய்து பாருங்கள். இதனையே அடிக்கடி செய்து தருமாறு வீட்டில் உள்ளவர்கள்,குறிப்பாக குழந்தைகள் கேட்டு கேட்டு சாப்பிடுவார்கள். இதனை காலை மட்டுமல்லாமல் மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து சாப்பிடலாம்.