எண்ணெய் கத்திரிக்காய் தெரியும்.இதென்ன எண்ணெய் மாங்காய்!- வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்!

வாருங்கள்! ருசியான எண்ணெய் மாங்காயை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Oil Raw Mango in Tamil

வழக்கமாக மாங்காய் வைத்து சாம்பார், ஊறுகாய், சட்னி, மாங்காய் சாதம் என்று பல விதமான ரெசிபிக்கள் செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் மாங்காய் வைத்து அட்டகாசமான ஒரு ரெசிபியை செய்ய உள்ளோம். இதனை சப்பாத்தி,தோசை,சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றிக்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும் .

மேலும் ஒரு சிலர் இதனை அப்படியே சாப்பிடுவார்கள். அவ்வளவு அருமையாக இருக்கும் இந்த எண்ணெய் மாங்காய். இன்று இந்த எண்ணெய் மாங்காய் ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதனை ஒரு முறை செய்து கொடுங்கள். இனி மாங்காய் வாங்கினால் இதனையை அடிக்கடி செய்து தரும்படி வீட்டில் இருப்பவர்கள் கூறும் அளவிற்கு இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். 

வாருங்கள்! ருசியான எண்ணெய் மாங்காயை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள் :

மாங்காய் (மீடியம் சைஸ்) - 6
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1ஸ்பூன்
கடுகுத்தூள் - 1ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 50 கிராம்
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
கடுகு-1/2 ஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 100 மில்லி 

உடல் எடையை குறைக்க எளிய வழிசெய்யும் "கம்பு சாம்பார் சாதம்"!

செய்முறை

முதலில் மாங்காய்களை கழுவி வைத்து பின் துடைத்து ஒரே மாதிரியான அளவில் சிறு சிறு துண்டுகளாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்த பிறகு, அதில் வெந்தயத்தை சேர்த்து சிவக்க வறுத்துக் கொண்டு அதனை மிக்சி ஜாரில் சேர்த்து பொடித்துக் வைத்துக் கொள்ள வேண்டும். 

பின் அதே கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும். பின் அதில் இரண்டு காய்ந்த மிளகாயினை கிள்ளி போட்டு தாளிக்க வேண்டும். பின் அரிந்து வைத்துள்ள மாங்காய் துண்டுகளை சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்  இப்போது இதில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு, அடுப்பின் தீயினை மிதமாக வைத்துக் கொள்ள வேண்டும். 

பிறகு அதில் கடுகுத்தூள் சேர்த்து மீதமுள்ள நல்லெண்ணெயை ஊற்றி பொடித்து வைத்துள்ள வெந்தயம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துக் நன்றாக கிளறி விட வேண்டும்.  பின் அதனை அடுப்பில் இறக்கி விட்டு ஆறிய பிறகு சாப்பிட்டால் அருமையான எண்ணெய் மாங்காய் ரெடி!!

இதனை சுத்தமான க்ளாஸ் பாட்டில்அல்லது ஜாடியில் மாற்றி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். சப்பாத்தி, தயிர் சாதத்திற்கு அட்டகாசமான ஒரு காம்பினேஷனாக இருக்கும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios