Noodles Pakoda : நூடுல்ஸ் பக்கோடா தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

வாருங்கள்! நூடுல்ஸ் பக்கோடாவை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

How to make Noodles Pakoda in Tamil

குட்டிஸ்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் நூடுல்ஸும் ஒன்று. குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்கள் கூட இதனை விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள். நூடுல்ஸில் சிக்கன் நூடுல்ஸ்,எக் நூடுல்ஸ் , வெஜ் நூடுல்ஸ்,மஷ்ரூம் நூடுல்ஸ் என்று பல விதங்களில் செய்து சாப்பிட்டு இருப்போம். அதே போன்று நாம் ஆனியன் பக்கோடா , மஷ்ரூம் பக்கோடா , கோபி பக்கோடா என்று  பல விதங்களில் செய்து சாப்பிட்டு இருப்போம்.

ஆனால் இன்று நாம் சற்று வித்தியாசமாக நூடுல்ஸ் வைத்து பக்கோடா ரெசிபியை செய்ய உள்ளோம். நூடுல்ஸ் வைத்து பக்கோடா என்று யோசிக்கிறீர்களா? ஆம் வழக்கமாக நாம் சாப்பிடும் பக்கோடாக்களில் இருந்து இதன் சுவை சற்று வித்தியாசமாக இருக்கும். வாருங்கள்! நூடுல்ஸ் பக்கோடாவை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் பாக்கெட் - 1
கடலை மாவு -1/2 கப் 
கார்ன் பிளார்-2 ஸ்பூன் 
நூடுல்ஸ் மசாலா - 1
வெங்காயம் - 1
கேப்ஸிகம் -1/2
கோஸ் -1/4 கப் 
பச்சை மிளகாய் - 1
சீரக தூள் -1/2 ஸ்பூன் 
மிளகாய் தூள்-1/2 ஸ்பூன் 
ரவை-1/2 ஸ்பூன் 
மல்லித்தழை-கையளவு 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு 

உடல் எடையை குறைக்க எளிய வழிசெய்யும் "கம்பு சாம்பார் சாதம்"!

செய்முறை:

முதலில் வெங்காயம், கேப்ஸிகம், முட்டை கோஸ்,பச்சை மிளகாய் மற்றும் மல்லித்தழை ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.  அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும். தண்ணீர் சூடான பின் மேகி மசாலா ஈர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் நூடுல்ஸ் சேர்த்து வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பௌலில் கடலை மாவு,ரவை,பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.பின் அதில் அரிந்து வைத்துள்ள வெங்காயம், கேப்ஸிகம் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் மல்லித்தழை,சீரகத்தூள்,மஞ்சள்தூள் மற்றும் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

பின் இறுதியாக இதில் வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடான பின் பிசைந்த கலவையை கையில் கொஞ்சம் எடுத்து கொதிக்கும் எண்ணெய்யில் சிறிது சிறிதாக கிள்ளி போட்டு தீயினை சிம்மில் வைத்து பொரித்து எடுக்க வேண்டும். அவ்ளோதான். ருசியான நூடுல்ஸ் பக்கோடா ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios