டென்ஷனை நீக்கி புத்துணர்ச்சி தரும் மணமனக்கும் ''மசாலா டீ''!
தினமும் நமது காலை பொழுது டீ அல்லது காபியுடன் ஆரம்பமாகும். நாம் அருந்தும் டீயில் இஞ்சி டீ , லெமன் டீ ,க்ரீன் டீ என பல வகைகள் உள்ளன.அதில் ஒன்று தான் மசாலா டீ. சுவை மற்றும் புத்துணர்ச்சி தரக்கூடிய டீ என்றால் அது மசாலா டீ தான். மசாலா டீ வீட்டில் செய்வது எப்படி என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
நாம் அனைவருக்கும் டீ செய்ய தெரியும் நம்மில் பல பேர் மசாலா டீ யையும் போடுவோம். ஆனால், அந்த டீயுடன் ஒரு சில டிப்ஸ் ஃபாலோ செய்தோம் என்றால் அதன் மணமும்,சுவையும் அதிகரிக்கும் மேலும் நீண்ட நேரம் நாவிலும் ,தொண்டையிலும் அதன் சுவை நிலைத்திருக்கும். இந்த மாதிரி ஒரு முறை , டீ செய்து பாருங்க! மீண்டும் மீண்டும் இந்த மாதிரியே டீ போடுவிங்க! டீ பிடிக்காது என்பவர்களும் இதன் மணத்திற்கு டீயை விரும்பி கேட்டு அருந்துவார்கள். அவ்வளவு சுவையான மசாலாடீயை எப்படி செய்வது? தெரிந்து கொள்ளலாமா?
சிறிய தேனீர் கடைகளிலிருந்து பெரிய ரெஸ்டாரண்ட் வரை இந்த மசாலா டீ விற்பனை செய்யப்படுகிறது.பொதுவாக நாம் வீட்டில் செய்யும் டீயில் இஞ்சி மற்றும் ஏலக்காய் சேர்த்து டீ செய்வோம். அதனுடன் பட்டை, லவங்கம் போன்றவையும் சேர்க்கும் போது சுவையும் ,மணமும் அதிகமாக இருக்கும் மேலும் புத்துணர்ச்சியை தரும்.
பாசி பருப்பு கச்சோரி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
பால் – 2 கப்
இஞ்சி – 1 துண்டு
ஏலக்காய் – 6
லவங்கம் – 4
பட்டை – 1 துண்டு
டீ தூள் - தேவைக்கேற்ப
சர்க்கரை –தேவைக்கேற்ப
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 2 கப் பால் சேர்த்து காய்ச்சவும். அம்மி கல்லில் ஏலக்காய், துண்டு பட்டை, இஞ்சி மற்றும் லவங்கம் சேர்த்து நைசாக இடித்துக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் 1 கப் தண்ணீர் சேர்த்து சூடானதும் 2 ஸ்பூன் டீத்தூள் சேர்த்துக் கொண்டு, அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து பாதியாக வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
Carrot Chutney : இதய நோய் வராமல் பாதுக்காக்க ஆரோக்கியமான கேரட் சட்னி!
அடுத்து 2 ஸ்பூன் அல்லது உங்கள் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துகலக்கி பால் பொங்கி வந்ததும் அதில் டீ டிகாஷன் சேர்த்து கொள்ளவும். மேலும் மூன்று நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்கவும்.பின் வடிகட்டிக் கொண்டு வடிகட்டி மசாலா டீயை சூடாக அருந்தவும்.