மாம்பழ சீசனில் இந்த தித்திப்பான மாம்பழ கேசரி செய்து அசத்துங்க!

வாருங்கள்! முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை வைத்து மாம்பழ கேசரி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How To Make Mango Kesari In Tamil

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை பலரும் விரும்பி ,ரசித்து, ருசித்து சாப்பிடுவார்கள். சீசன் பழங்களில் ஒன்றான மாம்பழம் கோடைகாலத்தில் அதிகளவில் கிடைக்கக்கூடிய ஒன்றாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு பழம் என்று கூறலாம். ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் இருக்கும். அந்த வகையில் மாம்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி , மற்றும் வைட்டமின் பி 6 ஆகியவை காணப்படுகின்றன. இதனை தவிர காப்பர், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்களும் நிறைந்து இருப்பதால் இதனை நாம் அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம்.

மாம்பழம் வைத்து மில்க்ஷேக், மேங்கோ ஸ்மூத்தி, மேங்கோ புட்டிங், மேங்கோ கேக், மேங்கோ ஐஸ் க்ரீம் என்று எது செய்து கொடுத்தாலும் அடுத்த நிமிடமே அனைத்தும் காலி ஆகி விடும். அந்த வகையில்  இன்று நாம் மாம்பழம் வைத்து சுவையான கேசரி செய்ய உள்ளோம். பொதுவாக ஆப்பிள், மாதுளை, பைன் ஆப்பிள் போன்றவற்றை சேர்த்து கேசரி செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இன்று நாம் தித்திப்பான மாம்பழம் வைத்து டேஸ்ட்டான கேசரி செய்ய உள்ளோம்.

வாருங்கள்! தித்திப்பான மாம்பழ கேசரி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

மாம்பழம்-1
ரவை-1 கப்
பால்- 1கப்
சர்க்கரை-1 கப்
முந்திரி-10
பாதாம்- 10
ஏலக்காய் தூள்-1 சிட்டிகை
நெய் - தேவையான அளவு

இட்லி மாவு வைத்து மொறுமொறு ரிப்பன் பக்கோடா செய்யலாம் வாங்க!

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது நெய் சேர்த்து உருகிய பின்னர் பொடித்த முந்திரி மற்றும் பொடித்த பாதாம் ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் ரவை சேர்த்து வறுத்துக் அதனையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். மாம்பழத்தை தோல் சீவி பழத்தை ஒரே மாதிரியான அளவில் வெட்டி அதனை மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். இப்போது வறுத்து வைத்துள்ள ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி விட்டு வேக வைக்க வேண்டும். ரவை வெந்த பிறகு சர்க்கரை சேர்த்து கிளறி விட்டு பின் அதில் புட் கலர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

ரவை வெந்து கேசரி பதம் வந்த பிறகு, அதில் ஏலக்காய் தூள் மற்றும் மாம்பழ பேஸ்ட் சேர்த்து கிளறி விட வேண்டும். இறுதியாக வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து கிளறி விட்டு சிறிது நெய் சேர்த்து மூடி விட்டு அடுப்பை ஆஃப் செய்து விட வேண்டும். சுமார் 5 நிமிடங்கள் கழித்து மூடி எடுத்து நன்றாக கிளறி விட்டு பரிமாறினால் வீடே கமகமக்கும் தித்திப்பான மாம்பழ கேசரி ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios