நவராத்திரியின் முதல் நாள் பிரசாதம் கற்கண்டு பாயசம் . சுவையாக செய்து நெய்வேத்தியமக கொடுங்கள்!
நவராத்திரி துவங்க உள்ளது. அம்பாளுக்கு முதல் நாள் பிரசாதமாக கற்கண்டு பாயசம் சுவையாக செய்வது எப்படி என்று இன்றைய பதிவில் தெரிந்து கொள்வோம்.
புரட்டாசி மாதத்தில் சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படும் .இம்மாதத்தின் அம்மாவாசைக்கு பிறகு வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை 9 நாட்கள் அனுஷ்டிக்கபடும்.
9 நாட்களிலும் 9 விதமான பிரசாதங்கள் அம்பாளுக்கு நெய்வேதியமாக செய்யப்படும். முதல் நாள் கற்கண்டு பாயசம் நெய்வேத்தியமாக செய்வார்கள். அதனை எப்படி சுவையாக செய்வது? . பார்க்கலாம் வாங்க.
Navartri : நவராத்திரி - ஒவ்வொரு நாளின் சிறப்பு என்ன தெரியுமா?
தேவையான பொருட்கள்:
1 கப் -பால்
டைமண்ட் கற்கண்டு 1/8 கப்
ஜவ்வரிசி -1/8 கப்
1/4 ஸ்பூன் - நெய்
2 சிட்டிகை - ஏலக்காய் பொடி
10- முந்திரி பருப்பு
5 -உலர் திராட்சை
Navratri : தமிழகத்தில் நவராத்திரி கொண்டாட்டம்
செய்முறை:
ஜவ்வரிசியை 2 - 4 மணிநேரம் வரை ஊறவைக்க வேண்டும், அடுப்பில் ஒரு கிண்ணத்தில் 1/2 கப் பால் சேர்த்து ஜவ்வரிசியை வேக வைக்க வேண்டும். வேக வைத்த ஜவ்வரிசியை மீதமுள்ள பாலுடன் சேர்க்க வேண்டும்.
கற்கண்டை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த கற்கண்டை ஜவ்வரிசியில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விட வேண்டும். அடிப் பிடிக்காமல் இருக்க இடைஇடையே கலக்கி கொண்டே இருக்க வேண்டும்.
கொலு எந்த வரிசையில் எந்த பொம்மை.. என்பதில் ஒளிந்திருக்கும் உண்மை!
பால் பாதி வற்றியதும் ஏலக்காய் பொடி தூவி விட வேண்டும். இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து இறக்கி விட வேண்டும். அவ்ளோதாங்க குறைந்த நேரத்தில் எளிமையான முறையில் சுவையான கற்கண்டு பாயசம் ரெடி.
மிகவும் சுலபமான சுவையான மற்றும் அம்பாளுக்கு பிடித்த கற்கண்டு பாயசம் நவராத்திரியின் முதல் செய்து அம்பாளின் அனுக்கிரகம் பெற்று சுபமாக வாழுங்கள்.