க்ரிஸ்பி அண்ட் ஹெல்த்தி ஸ்னாக்ஸ் கொள்ளு வடை!

நாம் உணவில் அடிக்கடி கொள்ளு எடுத்துக் கொள்வதனால் சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றும். மேலும் உடலில் தேங்கி இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும் . இதனை தவிர ஜலதோஷம் மற்றும் ஜுரம் போன்றவையையும் குறைக்கும் தன்மை கொண்டது. இவ்வளவு ஆரோக்கிய நலன்களை அள்ளித் தரும் கொள்ளு வைத்து சத்தான ஒரு வடை ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Horse Gram vada in Tamil

நாம் ஆரோக்கியமாக வாழ அன்றாடம் நாம் எடுத்துக் கொள்ளும் உணவை சுவையானதாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல் சத்தானதாக எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். அப்படிப்பட்ட சத்தான உணவு வகைகளில் ஒன்றான கொள்ளு வைத்து ஒரு ரெசிபியை காண உள்ளோம். கொள்ளில் அதிக அளவு பாஸ்பரஸ், ப்ரோட்டின்,கால்சியும் மற்றும் இரும்பு சத்து இருப்பதால் ஆயுர்வேத, சித்த மருத்துவத்தில் இன்றும் கொள்ளு பயன்படுத்தி வருகிறார்கள். கொள்ளு வைத்து ரசம், துவையல், குழம்பு, சுண்டல் என்று பல்வேறு வகைகளில் சாப்பிட்டு இருப்பீர்கள். ஒரு சிலர் அதனை ஊற வைத்தோ, வறுத்தோ கொள்ள சாப்பிடுவார்கள். ஆனால் இன்று நாம் சற்று வித்தியாசமாக கொள்ளு வைத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும் வடை ரெசிபியை காண உள்ளோம்.

நாம் உணவில் அடிக்கடி கொள்ளு எடுத்துக் கொள்வதனால் சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றும். மேலும் உடலில் தேங்கி இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும் . இதனை தவிர ஜலதோஷம் மற்றும் ஜுரம் போன்றவையையும் குறைக்கும் தன்மை கொண்டது. இவ்வளவு ஆரோக்கிய நலன்களை அள்ளித் தரும் கொள்ளு வைத்து சத்தான ஒரு வடை ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

முளைகட்டிய கொள்ளு - 1 கப்
பச்சைமிளகாய் - 2
வெங்காயம் - 4
சோம்பு-1/2 ஸ்பூன்
இஞ்சி-1/4 இன்ச்
கறிவேப்பிலை -1 கொத்து
மல்லித்தழை - கையளவு
பெருங்காயத் தூள்- 1 சிட்டிகை
சமையல் சோடா - 1 சிட்டிகை
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
 

ஞாபகசக்தியை அதிகரிக்க "வெண்டைக்காய் சப்ஜி" செய்து சாப்பிடுங்க!!


செய்முறை:

முதலில் வெங்காயம், மல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் முளைகட்டிய கொள்ளு பருப்பை சேர்த்து வெறும் கடாயில் நன்றாக வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை ஒரு பௌலில் போட்டு தண்ணீர் ஊற்றி சுமார் 8 மணி நேரம் வரை ஊற வைத்து மிக்சி ஜாரில் சிறிது தண்ணீர் தெளித்து உப்பு, பெருங்காயத்தூள்,சமையல் சோடா ஆகியவை சேர்த்து கொரகொரவென அரைத்து ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது அரைத்த மாவினில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி,கறிவேப்பிலை,மல்லித்தழை, மற்றும் சோம்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி,எண்ணெய் சூடான பின் அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து மாவை வடை போன்று தட்டி ஒரு பக்கம் சிவந்த பின்னர் மறுபக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் பரிமாறினால் க்ரிஸ்பி அண்ட் ஹெல்த்தி கொள்ளு வடை ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios