நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் நெல்லிக்காய் ஊறுகாய்!

வாருங்கள்! ஆரோக்கியத்திற்கு அருமருந்தாக பயன்படும் நெல்லிக்காய் வைத்து ஊறுகாய் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 
 

How to make Gooseberry Pickle in Tamil

குஜராத் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற உணவு ரெசிபிகளில் ஒன்றான ஆம்லா சுண்டா என்றழைக்கப்டும் நெல்லிக்காய் ஊறுகாயும் ஒன்றாகும். இதில் இனிப்பு,காரம், புளிப்பு மற்றும் உப்பு ஆகிய நான்கு சுவைகளையும் கொண்டது. நெல்லியில் அதிக அளவில் விட்டமின் சி இருப்பதால் நாம தினமும் அதனை உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. சுண்டா என்றால் ஊறுகாயை குறிக்கும். இந்த நெல்லி சுண்டா சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் அஜீரண கோளாறை சரி செய்யவும் நெல்லி பெரிதும் பயன்படுகிறது. இதனை தவிர நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

வாருங்கள்! ஆரோக்கியத்திற்கு அருமருந்தாக பயன்படும் நெல்லிக்காய் வைத்து ஊறுகாய் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய் - 7
வெல்லம் - 100 கிராம்
லெமன் ஜூஸ்-2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
இஞ்சி - 2 இன்ச்
உப்பு-தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
 

க்ரன்ச்சி அண்ட் க்ரிஸ்பியான ஹனி சில்லி பொட்டேட்டோ!


செய்முறை:

முதலில் நெல்லிக்காயை அலசி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு இட்லி பாத்திரம் வைத்து இட்லி தட்டில் நெல்லிகளை வைத்து ஆவியில் சுமார் 20 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். பின் அதனை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து நெல்லிக்காய்களின் விதைகளை எடுத்து விட்டு துருவி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு அடி கனமான விலசாமான பாத்திரம் வைத்து அதில் நெல்லிக்காய் துருவலை சேர்த்து பின் வெல்லம் சேர்த்து அடுப்பின் தீயினை மிதமாக வைத்து கிளற வேண்டும்.

நெல்லிக்காய் வெல்லத்தில் கரைந்து நன்றாக மிக்ஸ் ஆன பிறகு துருவிய இஞ்சி சேர்த்து கிளறி விட வேண்டும். பின் சீரகத் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து நெல்லிக்காய் பொன்னிறமாக ஆகும் வரை கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும்.

அடுத்தாக அதில் லெமன் ஜூஸ் மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து விட்டு அடுப்பில் இருந்து விட வேண்டும். இப்போது 'நெல்லி ஊறுகாய்" ரெடி! இதைக் கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி தினமும் சிறிது சாப்பிட்டு வர உடல் வலுவாகும். நீங்களும் இதனை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios