Asianet News TamilAsianet News Tamil

குழந்தைகளுக்கு பிடித்த "சாக்லேட் கேக்" முட்டை சேர்க்காமல் , செய்யலாம் வாங்க!

மிகவும் எளிதான சாக்லேட் கேக் முட்டை சேர்க்காமல் மற்றும் ஓவன் இல்லாமல் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.
 

How to make Eggless Chocolate Cake in Tamil
Author
First Published Oct 29, 2022, 7:59 PM IST

கேக்கா! நான் அப்படியே சாப்பிட்டு விடுவேன் என்று சொல்லும் அளவிற்கு அனைத்து குழந்தைகளுக்கும் பிடித்த ஒரு உணவு வகை என்றால் அது கேக்.தான் .அதிலும் குறிப்பாக சாக்லேட் கேக் என்றால் சொல்லவே வேண்டாம். இன்னும் வேண்டும் வேண்டும் என்று அடம் பிடித்து கேட்பார்கள். அந்த வகையில் வீட்டிலேயே மிகவும் எளிதான சாக்லேட் கேக் முட்டை சேர்க்காமல் மற்றும் ஓவன் இல்லாமல் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

தேவையான பொருட்கள்:

11/2 கப் மைதா
1 கப் பால்
1 1/4 கப் சர்க்கரை
1/2 கப் பட்டர் 
1/2 கப் கோகோ பவுடர் 
1 ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
1 ஸ்பூன் பேக்கிங் சோடா
1 ஸ்பூன் வினிகர்
1/4 ஸ்பூன் உப்பு
எண்ணெய் தேவையான அளவு 

அசத்தலான "மூங்கில் சிக்கன் பிரியாணி" - எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க!

செய்முறை :

முதலில், பேக்கிங் பேப்பரைப் போட்டு ஐந்து அங்குல கேக் டின்னில் ஒழுங்குப் படுத்தி பட்டர் தடவி பின்னர் அதனை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்துக் கொண்டு அதில் வினிகர் சேர்த்து ,சுமார் ஐந்து நிமிடங்கள் சென்ற பிறகு, மோர் கிடைக்கும். அதில் எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து , சர்க்கரை நன்றாக கரையும் வரை காத்திருக்க வேண்டும். 

இப்போது ஒரு சல்லடையில் கோகோ பவுடர், மைதா, உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து சல்லடை செய்து அதனை அந்த மோரில் சேர்த்து கட் மற்றும் ஃபோல்ட் முறையைப் பயன்படுத்தி, ஒரு சாஃப்ட்டான மாவை செய்து கொள்ள வேண்டும். பின் அதில் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். மாவு தயாரானதும், அதனை கேக் டின்னுக்கு மாற்றி கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு அகன்ற கடாய் வைத்து ஒரு தட்டு வைக்க வேண்டும். அடுப்பின் தீயை சிம்மில் வைத்து வெறும் கடாயினை சுமார் 7 முதல் 8 நிமிடங்கள் வரை சூடாக்க வேண்டும்.7 நிமிடங்கள் கழித்து, கேக் அச்சினை கடாயில் வைத்து கிட்டத்தட்ட 45 முதல் 50 நிமிடங்கள் வரை கேக்கை சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

கேக் பேக் ஆகி உப்பி வருவதை காண முடியும். இப்போது கேக்கினை ஆற வைத்து விட்டு சிறிய துண்டுகளாக செய்து வெட்டி எடுக்கவும். அவ்ளோதாங்க ஓவன் இல்லாமல், முட்டை சேர்க்காமல் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் கேக் ரெடி!! நீங்களும் இதனை நிச்சயம் ட்ரை பண்ணி பாருங்க!
 

Follow Us:
Download App:
  • android
  • ios