Asianet News TamilAsianet News Tamil

சேமியாவை இப்படி செய்து கொடுங்க! பிடிக்காது என்றவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்!

அனைவருக்கும் பிடிக்கும் வகையில் முட்டை மற்றும் மசாலா சேர்த்து அட்டகாசமான சுவையில் சேமியா உப்புமாவை சுலபமாக வீட்டில் செய்வது எப்படி என்று இந்த பதிவின் கொள்ளலாம்.

How to make Egg Semiya Upma in Tamil
Author
First Published Nov 23, 2022, 6:33 PM IST

நம்மில் பெரும்பாலோனருக்கு உப்புமா என்றாலே முகம் சுளித்து தான் சாப்பிடுவார்கள். ஆனால் உப்புமாவானது மிகவும் சுலபமாக செய்யக்கூடிய மற்றும் ஆரோக்கியமான வகை ஆகும். 

பலருக்கும் உப்புமா பிடிக்காததற்கு முக்கிய காரணம் அதன் சுவையே. எனவே அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் உப்புமாவை கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சமைக்கலாம் வாங்க! இந்த மாதிரி ஒரு முறை செய்து பாருங்கள். உப்புமாவை பிடிக்காது என்று கூறியவர்கள் கூட நிச்சயமாக அடிக்கடி செய்து தருமாறு விரும்பி சாப்பிடுவார்கள். 

அனைவருக்கும் பிடிக்கும் வகையில் முட்டை மற்றும் மசாலா சேர்த்து அட்டகாசமான சுவையில் சேமியா உப்புமாவை சுலபமாக வீட்டில் செய்வது எப்படி என்று இந்த பதிவின் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

சேமியா - 2 கப்
முட்டை - 2
பச்சை பட்டாணி - 1/2 கப்
வெங்காயம்-1/2 (மெல்லதாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
சோம்பு - 1 ஸ்பூன்
பட்டை-1 இன்ச் 
ஏலக்காய்-2 
முந்திரி-5
பச்சை மிளகாய் - 2 
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு-தேவையான அளவு 

சூப்பரான சுவையில் "சில்லி கொத்து சப்பாத்தி" ஈஸியா வீட்டில் செய்யலாம் வாங்க!

செய்முறை:

முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் சோம்பு, ஏலக்காய்,பட்டை மற்றும் முந்திரி சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்.  பின் அதில் மெல்லிதாக அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு, பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். 

இஞ்சி பூண்டின் பச்சை வாசனை சென்ற பிறகு,தக்காளி சேர்த்து, தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்கி விட வேண்டும். 

மசாலாக்களின் காரத் தன்மை சென்ற பிறகு, பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி விட வேண்டும். அடுத்து 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் தண்ணீரில் சேமியாவை சேர்த்து நன்றாக கிளறி விட்டு, பின் வேக வைக்க வேண்டும். 

சேமியா வெந்த பிறகு முட்டைகளை உடைத்து ஊற்றி,நன்றாக கிளறி விட்டு ஒரு தட்டு போட்டு மூடி கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும். 8 நிமிடங்கள் பிறகு அடுப்பை ஆஃப் செய்து விட்டு தட்டை திறந்து, கொஞ்சம் கிளறி இறக்கினால்,சுட சுட முட்டை சேமியா உப்புமா ரெடி!!!

 

Follow Us:
Download App:
  • android
  • ios