ஈவ்னிங் ஸ்னாக்ஸிற்கு பெஸ்ட்-குட்டிஸ்கள் விரும்பி சாப்பிடும் கிரிஸ்பி அண்ட் கிரன்ச்சி சில்லி சீஸ் பஜ்ஜி!

வாருங்கள்! மொறுமொறுவென இருக்கும் சில்லி சீஸ் பஜ்ஜி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Crispy and Crunchy Chili Cheese Bajji in Tamil

குழந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வீட்டிலேயே தான் இருப்பார்கள். இப்படி வீட்டில் இருக்கும் குட்டிஸ்களுக்கு அவர்கள் விரும்பி சாப்பிட ஏதெனும் ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை செய்து தாரா வேண்டுமென்று நினைத்தால் இந்த ரெசிபியை செய்து தாங்க.

ஒன்னுக்கூட மிச்சமில்லாம சாப்பிட்டு முடித்து மீண்டும் சாப்பிட கேட்பார்கள்.என்ன ஸ்னாக்ஸ் என்று தெரியணுமா? சில்லி சீஸ் பஜ்ஜி தாங்க. வழக்கமாக செய்கின்ற மிளகு பஜ்ஜி என்றால் கொஞ்சம் காரமாக இருக்கும் என்று குழந்தைகள் சாப்பிட தயங்குவார்கள்.

ஆகையால் மிளகாய் நடுவே சீஸ் வைத்து நிரப்பினால் ஜூசியாகவும் இருப்பதால் காரமும் குறைந்து இருப்பதால் குழந்தைகள் மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.

வாருங்கள்! மொறுமொறுவென இருக்கும் சில்லி சீஸ் பஜ்ஜி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 ஸ்பூன்
பஜ்ஜி மிளகாய் - 6
உப்பு-தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

ஸ்டப்பிங்கிற்கு :

வெங்காயம் - 1/2 கப்
சீஸ் - 1 கப்
உப்பு - தேவையான அளவு சுவைக்கேற்ப
மல்லித்தழை-கையளவு

செய்முறை:

முதலில் சீஸை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் மல்லித்தழையை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பஜ்ஜி மிளகாயை கீறி வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது பௌலில் துருவிய சீஸ் மற்றும் அரிந்து வைத்துள்ள வெங்காயம் ,மல்லித்தழை மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இப்போது ஒவ்வொரு மிளகாயையும் துடுது அதன் நடுவே இருக்கும் விதைகளை நீக்கி விட்டு உள்ளெ சீஸ் கலவையை வைக்க வேண்டும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதில் உப்பு, பேக்கிங் சோடா, பெருங்காயத் தூள் போன்றவை சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின் சீஸ் வைத்துள்ள மிளகாயை காதலி மாவில் பிரட்டி எடுத்து கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு அடுப்பின் தீயினை சிம்மில் வைக்க வேண்டும். இருந்து பக்கமும் பொன்னிறமாக மாறிய பின் எடுத்து வடிகட்டி பரிமாறினால் க்ரிஸ்பி அண்ட் க்ரன்ச்சி சில்லி சீஸ் பஜ்ஜி ரெடி!

வெறும் வயிற்றில் இதனை எடுத்தால் உடற்சூடு, உடல் எடை ,சிறுநீரக பிரச்னை இன்னும் நிறைய பிரச்னைகளை சரி செய்யுமாம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios