Asianet News TamilAsianet News Tamil

உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த மணமணக்கும் "தேங்காய் பால் கீரை சூப்"! இப்படி செய்து சாப்பிடுங்க!

வாருங்கள்! மணமணக்கும் தேங்காய் பால் கீரை சூப் எளிமையாக எப்படி வீட்டில் செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

How to make Coconut Milk  spinach Soup in Tamil
Author
First Published Dec 25, 2022, 10:41 AM IST

வழக்கமாக நாம் சாதத்தில் ஊற்றி சாப்பிடும் குழம்பு, ரசம், சாம்பார் என்று செய்து அலுத்து விட்டதா? இதனை தவிர்த்து வேறு ஏதாவது செய்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான்.

 இன்று நாம் தேங்காய் பால் வைத்து புதுமையாக ஒரு ரெசிபியை காண உள்ளோம். இதனை சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம் அதே போன்று சூப் போன்றும் அருந்தலாம். பொதுவாக தேங்காய் பாலை வைத்து பிரியாணி, குருமா போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் தேங்காய் பால் வைத்து சூப் செய்துள்ளீர்களா? 

நாம் வெஜ் சூப், மஷ்ரும் சூப், சிக்கன் சூப், ஸ்வீட் கார்ன் சூப் என்று பல விதமான சூப்களை செய்து சுவைத்து இருப்போம். இன்று நாம் சற்று மாற்றமாக தேங்காய் பாலுடன் கீரை சேர்த்து சத்தான கீரை தேங்காய் பால் சூப் பார்க்க உள்ளோம். இது சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. மேலும் இது சாம்பார், குழம்பு போன்றவற்றிக்கு நல்ல மாற்றாக இருக்கும். 

வாருங்கள்! மணமணக்கும் தேங்காய் பால் கீரை சூப் எளிமையாக எப்படி வீட்டில் செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

அரைக் கீரை-1/2 கட்டு 
மனத்தக்காளி கீரை-1/ 2 கட்டு 
அகத்திக் கீரை -1/4 கட்டு 
தேங்காய்-1/2 முடி
கசகசா-1/2 ஸ்பூன் 
உப்பு-தேவையான அளவு 

சூப்பரான சுவையில் கோவில் ஸ்டைல் கதம்ப சாதம்!!! இப்படி செய்து பாருங்க!

தாளிப்பதற்கு:

எண்ணெய்-1 ஸ்பூன் 
வர மிளகாய்-3
கடுகு-1/2 ஸ்பூன் 

செய்முறை:

முதலில் கீரைகளை நன்றாக அலசிக் கொண்டு ஆய்ந்து விட்டு பின் அதனை அரிந்து கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.  பின் அரிசி ஊறிய தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரிசி கழுவிய நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். 

அந்த கடாயில் சுத்தம் செய்து வைத்துள்ள கீரைகளை சேர்த்து , தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு ,அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கடாயை ஒரு தட்டு போட்டு மூடி வேக வைத்துக் கொள்ள வேண்டும். கீரைகள் நன்றாக வெந்த பிறகு அடுப்பினை ஆஃப் செய்து விட்டு அதனை ஆற வைத்து விட வேண்டும்.

இப்போது மிக்சி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் கசகசா சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதனை வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது கடாயில் (கலவை நன்கு ஆறிய பிறகு) எடுத்த தேங்காய் பாலை ஊற்றிக் கொண்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பிறகு, கடுகு, வர மிளகாய் சேர்த்து தாளித்துக் கொண்டு அதனை கீரை சூப்பில் சேர்த்தால் ருசியான கீரை சூப் ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios