Asianet News TamilAsianet News Tamil

குழந்தைகள் விரும்பும் சில்லி பேபி கார்ன்! இப்படி செய்த்து தந்தால் சத்தமில்லாமல் சாப்பிட்டு முடிப்பார்கள்

வாருங்கள்! ருசியான சில்லி பேபி கார்ன் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

How to make Chilli Baby corn in Tamil
Author
First Published Dec 23, 2022, 10:46 AM IST

குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் நாம் வழக்கமாக செய்து தருகின்ற ஸ்னாக்ஸ்களான புட்டு, சுண்டல், கொழுக்கட்டை, வடை, போன்று என்று இல்லாமல் சற்று மாற்றாக ஒரு ஸ்னாக்க்ஸ் ரெசிபியை நாம் இன்று காண உள்ளோம். மிக சுவையாக இருக்கும் இந்த ஸ்னாக்ஸ் ரெசிபியை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்..

வாருங்கள்! ருசியான சில்லி பேபி கார்ன் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

பேபி கார்ன் - 10
பெரிய வெங்காயம் - 1/4 கப்
கேப்ஸிகம் - 1/4 கப்
ஸ்பிரிங் ஆனியன் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 
பூண்டு - 1 ஸ்பூன் 
சோயா சாஸ் - 1/4 ஸ்பூன் 
சில்லி சாஸ் - 1/2 ஸ்பூன் 
டொமேட்டோ சாஸ் - 1 ஸ்பூன் 
ஆலிவ் ஆயில் - 1ஸ்பூன் 
மிளகுத் தூள் - 1/4 ஸ்பூன் 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 

மாவு செய்வதற்கு:

மைதா - 2 ஸ்பூன் 
கார்ன் பிளார் - 3 ஸ்பூன் 
மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு 

Pasalai Keerai: புதிய இரத்த உற்பத்திக்கு இந்த ஒரு கீரையே போதும்!

செய்முறை: 

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின் பாத்திரத்தை இறக்கி விட்டு அதில் பேபி கார்னை போட்டு சுமார் 5 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து விட வேண்டும். 5 நிமிடங்களுக்கு பிறகு, தண்ணீர் இல்லாமல் எடுத்துக் கொண்டு ,ஒரே மாதிரியான அளவில் நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். 

How to make Chilli Baby corn in Tamil

பின் ஒரு பௌலில் மைதா,கார்ன் பிளார்,மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொண்டு நன்றாக கலந்து விட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போன்று கரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு, பேபி கார்ன் துண்டுகளை கார்ன் பிளார் பேஸ்ட்டில் டிப் செய்து எண்ணெயில் போட்டு , தீயினை சிம்மில் வைத்து பொன்னிறமாக பொரித்துக் கொண்டு தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு அடுப்பில் மற்றொரு கடாய் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி காய்ந்த பிறகு, பூண்டு, ஸ்பிரிங் ஆனியன், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட்டு, அடுத்தாக வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும். வெங்காயம் சிறிது வதங்கிய பிறகு, கேப்ஸிகம் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி விட வேண்டும்.

அடுத்து, அதில் பொரித்து வைத்துள்ள பேபி கார்னை சேர்த்து ஒரு முறை பிரட்டி எடுத்துக் கொண்டு அதில் மிளகுத் தூள்,டொமேட்டோ சாஸ், சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இறுதியாக ஸ்ப்ரிங் ஆனியன் தூவி இறக்கினால் சுவையான சில்லி பேபி கார்ன் ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios