Chicken Urundai : சூப்பரான சிக்கன் உருண்டை குழம்பு!
எலும்புகளை மற்றும் பற்களை வலுவூட்ட, உடல் எடையை கூட்ட , சளி மற்றும் நெஞ்சு அடைப்பில் இருந்து நிவாரணம் பெற, இரத்த சோகையையே தடுக்க, மன ஆரோக்கியத்தை அதிகரிக்க நாம் கோழி இறைச்சியை சாப்பிடலாம். சரிங்க நாம் இப்போது கோழிக் கறியை வைத்து கோழி உருண்டை குழம்பு எப்படி செய்யலாம் என்று இன்றைய பதிவில் பார்க்கலாம்.
அசைவ உணவு வகைகளில் கோழிஇறைச்சியானது முக்கிய இடத்தை பெற்றுள்ளது. கோழியில் உள்ள எண்ணற்ற சத்துக்களால் நமக்கு அது பல வகைகளில் நன்மைகளை தருகின்றன.
எலும்புகளை மற்றும் பற்களை வலுவூட்ட, உடல் எடையை கூட்ட , சளி மற்றும் நெஞ்சு அடைப்பில் இருந்து நிவாரணம் பெற, இரத்த சோகையையே தடுக்க, மன ஆரோக்கியத்தை அதிகரிக்க நாம் கோழி இறைச்சியை சாப்பிடலாம். சரிங்க நாம் இப்போது கோழிக் கறியை வைத்து கோழி உருண்டை குழம்பு எப்படி செய்யலாம் என்று இன்றைய பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
உருண்டை செய்ய:
1/2 கிலோ போன்லெஸ் சிக்கன்
1 முட்டை 2 ஸ்பூன் வறுத்த பொறி கடலை மாவு
1 வெங்காயம்
சிறிது மல்லி தழை
1 பச்சை மிளகாய்
1/2 ஸ்பூன் மிளகாய் தூள்,
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
குழம்பு செய்ய :
1 வெங்காயம் மெல்லிசாக வெட்டியது
1 துண்டு இஞ்சி
2 பல் பூண்டு
2 தக்காளி
1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
1 ஸ்பூன் சீரக தூள்
1 ஸ்பூன் தனியா தூள்
2 ஸ்பூன் மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு
1/4 கப் கெட்டியான தயிர்
தாளிக்க :
எண்ணெய் 3 ஸ்பூன்
பிரியாணி இலை 1
பட்டை 1
ஏலக்காய் 2
கிராம்பு 2
1/2 ஸ்பூன் சீரகம்
2 பச்சை மிளகாய்
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் நன்கு கழுவிய சிக்கனுடன் , முட்டை, பாதி பொடியாக நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய், மிளகாய் தூள், மல்லி தழை மற்றும் உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும். கையில் சிறிது எண்ணெய் தடவி மிக்ஸ் செய்து வைத்து உள்ள சிக்கன் கலவையை உருண்டைகளாக செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி , எண்ணெய் சூடான உடன் , மிதமான தீயில் அடுப்பை வைத்து சிக்கன் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிக்கன் உருண்டைகள் ரெடி!
பின் அடுப்பில் ஒரு Pan வனித்து சிறிது எண்ணெய் சேர்த்து , எண்ணெய் காய்ந்த பின் அதில் குழம்பிற்கு எடுத்து வைத்துள்ள வெங்காயம் , இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாடை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். பின் தக்காளி மற்றும் அனைத்து மசாலா தூள்களையும் சேர்த்து சிறிது நீர் தெளித்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும் . இந்த கலவையை ஆற வைத்து விட்டு பின் மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் தாளிப்பதற்கு ஒரு pan இல் சிறிது 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து தாளிக்க எடுத்து வைத்துள்ள பொருட்களை சேர்க்க வேண்டும். பின் அதனுடன் அரைத்த பேஸ்ட் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு காகித உடன் தயிர் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும் பின் இதனை நன்றாக கலக்கி விட வேண்டும். இப்போது இதனுடன் பொறித்த சிக்கன் உருண்டைகளை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 - 7 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். இறுதியாக சிறிது மல்லி தழையை தூவ வேண்டும். அவ்ளோதாங்க நமது சிக்கன் உருண்டை குழம்பு ரெடி!