காலிஃப்ளவர் வைத்து சூப்பரான காலிஃப்ளவர் சில்லி ப்ரை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் பல வகையான காய்கறிகளை எடுத்துக் கொள்கிறோம். ஒவ்வொரு காய்கறியும் ஒவ்வொரு விதத்தில் நமக்கு நன்மைகளை நமக்கு தருகின்றன. அந்த வகையில் இன்று நாம் காலிஃப்ளவர் வைத்து ஒரு சுவையான ரெசிபியை பார்க்க உள்ளோம்.இந்த காலிஃப்ளவர் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் உடல் வலிமை கிடைக்க உதவுகிறது. மேலும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது.
காலிஃப்ளவரானது புற்று நோய் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும், இது ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை சேரவிடாமல் தடுத்து, இருதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தை பலப்படுத்துகிறது. இவ்வளவு நன்மைகளை தருகின்ற காலிஃப்ளவர் வைத்து சூப்பரான காலிஃப்ளவர் சில்லி ப்ரை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் -1
உருளைக்கிழங்கு -1/4 கிலோ
தக்காளி - 200 கிராம்
சின்ன -150 கிராம்
பட்டை - 1 இன்ச்
பச்சைமிளகாய் - 6
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் -தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைத்த மசாலாவின் வாசனையில் கமகமவென்று வீடே மணக்கும் "சேலத்து மீன் குழம்பு" செய்யலாம் வாங்க
செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். பின் பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ள வேண்டும். பின் காலிஃப்ளவரை சுத்தப்படுத்திக் கொண்டு, சிறிய பீஸ்களாக அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ள வேண்டும்.பின் அந்த பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு, மஞ்சள் தூள், பட்டை மற்றும் விதை நீக்கிய காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கொண்டு, பாத்திரத்தை அடுப்பில் வைத்து, காலிஃப்ளவரை 1/2 வேக்காடாக வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து உருளைக்கிழங்கினை தோலுரித்து விட்டு, சிறிய ஒரே மாதிரியான துண்டுகளாக வெட்டிக் கொண்டு சிறிது உப்பு தூவி, பிரட்டி எடுத்து அதனை ,கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடான பின் வறுத்துக் கொண்டு தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி விட்டு, பின் இஞ்சி போடு பேஸ்ட் , கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும்.பின் அதில் வேக வைத்து எடுத்துள்ள காலிஃப்ளவரையும் போட்டு , நன்றாக கிளறி விட வேண்டும்.
அடுத்தாக வறுத்த உருளைத் கிழங்குகள், தக்காளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து, அடுப்பின் தீயினை மிதமாக வைத்து வேக விட வேண்டும்.அனைத்தும் வெந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து வரும் போது இறக்கினால் சூப்பரான சுவையில் காலிஃப்ளவர் சில்லி ப்ரை ரெடி!
