நியூ இயர் ஸ்பெஷல் ! தித்திப்பான கேரட் பாயசம் செய்து மகிழ்வுடன் கொண்டாடலாம் வாங்க!

வாருங்கள்! தித்திப்பான கேரட் பாயசத்தை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Carrot Kheer in Tamil

வழக்கமாக கேரட் வைத்து சாம்பார்,பொரியல், பச்சடி போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் கேரட் வைத்து சற்று வித்தியாசமாக ஒரு ரெசிபியை காண உள்ளோம். 

பொதுவாக அரிசி பாயசம், சேமியா பாயசம், அவல் பாயசம், பருப்பு பாயசம் என்று பல விதமான பாயசம் செய்து சுவைத்து இருப்போம். இன்று நாம் கொஞ்சம் புதுமையாக கேரட் வைத்து தித்திப்பான கேரட் பாயசம் செய்ய உள்ளோம். இதனை ஒரு முறை செய்து பாருங்கள். பின் வீட்டில்  அனைத்து விஷசங்களுக்கும் இந்த பாயசத்தையே செய்து தரும் படி வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள்.

அந்த வகையில் இந்த நியூ இயர் அன்று புதுமையான இந்த கேரட் பாயசம் செய்து வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்கலாம்.
வாருங்கள்! தித்திப்பான கேரட் பாயசத்தை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

கேரட் பாயசம் செய்ய தேவையான பொருட்கள்:

கேரட் – 1/4 கப்
வெல்லம் – 1/2 கப்
தேங்காய் பால் – 1 கப்
முந்திரி – 10
திராட்சை – 5 
உப்பு – 1 சிட்டிகை
நெய் – 2 ஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு

விடுமுறை கொண்டாட்டம்! குழந்தைகளுக்கு பால் - இப்படி செய்து கொடுங்க. மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்!

செய்முறை:

முதலில் கேரட்டை அலசிக் கொண்டு ,அதனை பொடியாக அரிந்து மிக்சி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.  தேங்காயை துருவிக் கொண்டு அதனை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொண்டு தேங்காய் பால் எடுத்து அதனை ஒரு கிண்ணத்தில் வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் சிறிது நெய் ஊற்றி உருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நெய் உருகிய பின்னர் அதில் முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து வறுத்துக் கொண்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.  ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து பின் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ள வேண்டும். பின் அதில் அரைத்து வைத்துள்ள கேரட் பேஸ்ட் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். 

கொஞ்சம் கொதித்த பிறகு அதில் எடுத்து வைத்துள்ள தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலந்து விட்டு பின் அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இறுதியாக வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறினால் தித்திப்பான கேரட் பாயசம் ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios