நாளை காலை பிரேக்ஃ பாஸ்ட்க்கு பார்லி வெஜடேபிள் உப்மா செய்து பாருங்க!

இத்தனை ஆரோக்கிய நலனை அள்ளித்தரும் பார்லியை வைத்து சூப்பரான வேஜடேபிள் உப்மா ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் தெரிந்து கொள்ளலாம்.
 

How to make Barley Vegetable Upma In Tamil

தினமும் இட்லி ,தோசை ,பூரி,பொங்கல் என்று சாப்பிட்டு அலுத்து விட்டதா? வேறு ஏதேனும் வித்தியாசமான அதே நேரத்தில் சுவையான ஆரோக்கியமான ஒரு ரெசிபியை செய்து தரும் படி வீட்டில் உள்ளவர்கள் கேட்கிறார்களா? அப்படியெனில் பார்லி வேஜடேபிள் உப்மா ஒரு நல்ல சாய்ஸ். இதனை வளரும் குழந்தைகள், இளைஞர்கள், கர்பிணிப் பெண்கள், வயதானவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற ஒரு உணவு வகை தான் இந்த பார்லி.

இதனை டயட்டில் உள்ளவர்கள் ,சர்க்கரை நோயாளிகள், இருதய பிரச்னை உள்ளவர்கள் என்று அனைவரும் எடுத்துக் கொள்ளும் விதத்தில் இது ஆரோக்கியமான உணவாகும். இதனை வாரத்தில் 1 முறையாவது எடுத்து எடுத்து வந்தால் நமது ஆரோக்கியம் மேம்படும். உடல் எடை குறைக்க விரும்புவோர் பார்லியை எடுத்து வர நல்ல உடல் எடையில் சிறந்த மாற்றத்தை காணலாம். தவிர ரத்த சோகையை சரி செய்வதில் நல்ல பங்களிப்பை தருகிறது.

அதோடு அல்லாமல் செரிமான கோளாறுகளையும் சரி செய்கிறது. மேலும் புற்று நோய் வராமல் தடுக்கும் பணியை மிகச் சிறப்பாக செய்கிறது. உடல் வலிமை பெற்று, நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. தவிர எலும்புகள் மற்றும் பற்கள் வலிமை பெறவும், பித்தப்பையில் இருக்கும் கற்களை கரைப்பதிலும் பெரிதும் துணை புரிகிறது.

இத்தனை ஆரோக்கிய நலனை அள்ளித்தரும் பார்லியை வைத்து சூப்பரான வேஜடேபிள் உப்மா ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானவை:

பார்லி – 1கப்
வெங்காயம் – 1
மிளகாய்-1
கேரட் – 1/2
பட்டாணி-1/2 கையளவு
பீன்ஸ் – 50 கிராம்
தண்ணீர் – 3கப்
இஞ்சி – 1துண்டு
கடுகு-1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு

மூட்டுவலியை மட்டுமில்ல முன்ஜென்ம வினைகளையும் போக்கக்கூடிய சக்தி இந்த ''பிரண்டைக்கு'' உண்டு என்று தெரியுமா!

செய்முறை:

முதலில் வெங்காயம்,பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி ஆகியவற்றை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். கேரட், பீன்ஸ் ஆகியவற்றை ஒரே மாதிரியான அளவில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் பார்லியை மிக்சி ஜாரில் சேர்த்து கொஞ்சம் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின், அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்தாக அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும் ..

அனைத்தும் நன்றாக வதங்கிய பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள கேரட், பீன்ஸ் மற்றும் பட்டாணி ஆகியவை சேர்த்து சிறிது நேரம் வதக்கி வேக வைக்க வேண்டும். இப்போது சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் பார்லியை சேர்த்து உப்பு தூவி வேக விட வேண்டும். பார்லி வெந்து தண்ணீர் அனைத்தும் வற்றிய பிறகு அதனை அடுப்பில் இருந்து இறக்கி மல்லித்தழையை தூவினால் சூப்பரான பார்லி வெஜடேபிள் உப்மா ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios