Asianet News TamilAsianet News Tamil

தித்திப்பான வாழைப்பழம் போண்டா செய்வோமா!

பழுத்த வாழைப்பழங்கள் வைத்து தித்திப்பான வாழைப்பழ போண்டாவை எப்படி சுலபமாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Banana Bonda in Tamil
Author
First Published Nov 20, 2022, 1:38 AM IST

வழக்கமாக மாலை நேரங்களில் டீ அல்லது காபி அருந்தும் நேரத்தில்,பஜ்ஜி, வடை, போண்டா போன்ற பதார்த்தங்களையும் சாப்பிடுவோம். அந்த வகையில் இன்று நாம் போண்டா ரெசிபியை காண உள்ளோம். போண்டாவில் மைசூர் போண்டா,கார போண்டா,முட்டை போண்டா என்று இதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். 

இன்று நாம் பார்க்க போவது தேன் போன்ற தித்திப்பான 1 போண்டா வகை ஆகும். இது குழந்தைகளின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.மேலும் இதனை குட்டிஸ்களின் பேவரைட் என்றும் கூறலாம்.பள்ளி முடித்து வரும் குழந்தைகக்கு இதனை செய்து கொடுத்து பாருங்கள்.மிகவும் மகிழ்ச்சியாக விரும்பி சாப்பிடுவார்கள். 

பழுத்த வாழைப்பழங்கள் வைத்து தித்திப்பான வாழைப்பழ போண்டாவை எப்படி சுலபமாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

காய்ச்சிய பால் -1/2 கப்
ரவை-1/4 கப் 
தேங்காய் துருவல்-1/4 கப் 
சர்க்கரை-2 ஸ்பூன்
முந்திரி பருப்பு-2 ஸ்பூன் (பொடித்தது) 
மஞ்சள் - 1 சிட்டிகை 
உப்பு-1 சிட்டிகை 
ஏலக்காய் பொடி- 2 சிட்டிகை 
நெய்-தேவையான அளவு 

ஆந்திரா ஸ்டைல் "புடலங்காய் பச்சடி" செய்யலாமா?

முதலில் அடுப்பில் ஒரு விலாசமான கடாய் வைத்து கொள்ள வேண்டும். அதில் சிறிது நெய் ஊற்றி விட்டு ,வெட்டி வைத்துள்ள வாழைப்பழ ஸ்லைஸ்களை நெய்யில் சேர்த்து மசித்து விட வேண்டும்.

பின் கடாயில் ரவை,தேங்காய் துருவல்,காய்ச்சிய பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து விட வேண்டும்.வாழைப்பழமும்,ரவையும் பாலில் நன்றாக வெந்து அல்வா பதத்திற்கு வரும் . 

இப்போது சர்க்கரையை கடாயில் சேர்த்து விட்டு, அதனுடன் மஞ்சள் தூள், ஏலக்காய் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். 

இப்போது கடாயில் உள்ள அனைத்தும் ஒன்றுடன் ஒன்றாக சேர்ந்து நன்கு வெந்து பின் கட்டி போன்ற பதத்திற்கு வரும் போது பொடித்த முந்திரி பருப்புகளை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து விட்டு அடுப்பை ஆஃப் செய்து விட வேண்டும். 

இந்த கலவையை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி விட்டு, ஆற விட வேண்டும். சிறிது நேரம் ஆறிய பிறகு, கலவையை கையில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின், கொதிக்கும் எண்ணெயில் உருண்டைகளை போட்டு (தீயினை சிம்மில் வைத்து விட வேண்டும்) பொன்னிறமாக பொரித்து எடுத்து விட்டால் தித்திப்பான வாழைப்பழம் போண்டா ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios