சத்தான வாழைப்பூ கிரேவி செய்யலாம் வாங்க!!!
வாழைப்பூ வைத்து சத்தான கிரேவியை எப்படி சுவையாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக வாழைப்பூ வைத்து நாம் வாழைப்பூ பொரியல், வடை என்று தான் செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் கொஞ்சம் வித்தியாசமாக வாழைப்பூ வைத்து சத்தான கிரேவியை எப்படி சுவையாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதன் துவர்ப்பு சுவை காரணமாகவும், சுத்தம் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதாலும் இதனை பெரும்பாலோனோர் இதை சமைப்பதில் தயக்கம் காட்டுகின்றனர். வாழைப்பூவை ஒரு நாள் முன்பே வாங்கி வைத்து நன்கு சுத்தம் செய்து விட்டால் போதும்.வெறும் 10 நிமிடத்தில் சுவையான இந்த கிரேவியை செய்து விடலாம்.
இந்த கிரேவியை சூடான சாதம், தோசை, சப்பாத்தி போன்றவற்றிக்கு வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். வாழைப்பூவை வாரம் ஒரு முறையாவது நமது சமையலில் எடுத்து கொண்டால் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1 கப்
வேர்க்கடலை – 2 ஸ்பூன்
தனியா விதைகள் – 2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பட்டை – 1
லவங்கம் – 2
துருவிய தேங்காய்-3 ஸ்பூன்
எள்ளு-1 ஸ்பூன்
வெங்காயம் -1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 1 கொத்து
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
தக்காளி - 1(பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
ருசியான மிளகு பூண்டு சாம்பார் !இப்படி செய்து பாருங்க-அருமையாக இருக்கும்
செய்முறை:
முதலில் வாழைப்பூவினை சுத்தம் சுத்தம் செய்து பொடியாக அரிந்து விட்டு, அதனை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் 1 கடாய் வைத்து வேர்க்கடலை ,தனியா, சீரகம், பட்டை, லவங்கம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்துக் கொண்டு, பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதே கடாயில் எள்ளு சேர்த்து பொரிந்த பிறகு, அடுப்பை ஆஃப் செய்து விட்டு தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் 1 பான் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் பொடியாக நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலை,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு, இஞ்சி பூண்டு சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட வேண்டும்.
பின் தக்காளி சேர்த்து,தக்காளி மசியும் வரை வதக்கி விட்டு, பின் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கரம் மசாலா மற்றும் உப்பு போட்டு வதக்கி விட்டு, பின் மோரில் இருக்கும் வாழைப்பூவினை தண்ணீர் இல்லாமல் எடுத்து இந்த பானில் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
வாழைப்பூ நன்றாக வதங்கிய பிறகு, அரைத்து வைத்துள்ள விழுதை இதில் சேர்த்து கொஞ்சம் 2 கப் தண்ணீர் ஊற்றி, நன்றாக மிக்ஸ் செய்து விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வாழைப்பூ வெந்து ,கிரேவி கொதித்து கொஞ்சம் கெட்டியாக வரும் போது, அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை சேர்த்து இறக்கினால் சூப்பரான வாழைப்பூவை வாழைப்பூ கிரேவி ரெடி!