Kids Snacks : களைப்பாக வரும் குழந்தைகளுக்கு ஸ்வீட்டான ஸ்நாக்ஸ் ''பீநட் பட்டர் மஃபின்ஸ்''!!

பள்ளி முடிந்து களைப்பாக வரும் குழந்தைகள் நிச்சயம் ஒரு ஸ்நாக்ஸை எதிர்பார்ப்பார்கள். அந்த வேளையில் மிக்சர், பூந்தி, வடை என அதிக எண்ணெயெ பலகாரங்களை கொடுத்து உடல் ஆரோக்கியத்தை கெடுக்க வேண்டாம். குழந்தைகளுக்கு மிகப் பிடித்த மருதுவான மற்றும் அரோக்கியமான பீநட் பட்டர் ம்ஃபின்ஸ் செய்துகொடுங்கள். இதை வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்வது என இந்தப் பதிவில் காணலாம்.
 

How to cook peanut butter muffins recipe in tamil

மஃபின்ஸ் செய்ய தேவையான பொருட்கள்

கேக் மாவு 150 கிராம்

பேக்கிங் பவுடர் ஒரு ஸ்பூன்

வெண்ணெய் 110 கிராம்

சர்க்கரை 200 கிராம்

பீநட் பட்டர் 4 ஸ்பூன்

முட்டை - 2

வெண்ணிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன்

பால் 80 மி.லி

செய்முறை

மைக்கோவேவ் ஓவனை முன்னதாகவே 180 டிகிரி செல்சியஸுக்கு சூடாக்க வேண்டும். கப்கேக் மோல்டில் எண்ணெயை பூசி வைத்துக்கொள்ள வேண்டும். இதனிடையே, கேக் மாவையும், பேக்கிங் பவுடரையும் ஒன்றாக கலந்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வெண்ணெயுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக திக்காகும் வரை அடித்து கலக்க வேண்டும். அதனுடன், பீநட் பட்டரையும் சேர்த்து மீண்டும் நன்றாக அடித்து கலக்க வேண்டும்.

பின்னர், அந்த கலவையுடன் ஒவ்வொரு முட்டையாக சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். நிறம் மற்றும் வாசனைக்காக வணில்லா எசன்ஸை கலக்கவும். இல்லையென்றால் பால் அல்லது மாவை சேர்க்கலாம்.

இறுதியாக, இந்த கலவையை கப்கேக் மோல்டில் ஊற்றவும். சுமார் 20 அல்லது 25 நிமிடங்கள் வரை மைக்கோவேவ் ஓவனில் பேக் செய்து இறக்கினார் பீநட் பட்டர் மஃபின்ஸ் ரெடி. இதனை, சூடாகவோ, சில்லென்றோ பரிமாறலாம், குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios