Bisi Bele Bath : ஆரோக்கியமான பிசி பெல்லா பாத் ! பார்க்கலாமா?

வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் ஒரு வகை உணவு. பிசி பெல்லாபாத்திற்கு அப்பளம் அல்லது காராபூந்தியுடன் பரிமாறுவது சிறந்த காம்பினேஷனாக இருக்கும். ஏனெனில் குழைந்து இருக்கும் இந்த சுவையான சாதத்திற்கு இவை மேலும் சுவையூட்டும்.

How to cook  Bisi Bele Bath recipe in Tamil

பிசி பெல்லா பாத் கர்நாடகாவின் மைசூர் அரண்மனையில் உதயமாகி செல்ல செல்ல தென்னிந்தியா முழுவதும் பிரசித்தி அடைந்தது என கூறப்படுகிறது.

இவை குறிப்பாக வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் ஒரு வகை உணவு. பிசி பெல்லாபாத்திற்கு அப்பளம் அல்லது காராபூந்தியுடன் பரிமாறுவது சிறந்த காம்பினேஷனாக இருக்கும். ஏனெனில் குழைந்து இருக்கும் இந்த சுவையான சாதத்திற்கு இவை மேலும் சுவையூட்டும்.

இதில் சேர்க்கும் பொருட்கள் ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. முக்கியமா௧ பருப்பில் புரத சத்து அதிகமாக உள்ளது . மேலும் இதில் சேர்க்கப்படும் காய்கறிகள் அதிகமான நார்ச்சத்து கொண்டவை. நமக்கு அவசியமான அனைத்து ஊட்டச்சத்துகளும் ஒரு உணவில் கிடைப்பது நமக்கு ஒரு வரம் என்று கூறலாம் .

அறுசுவையும் கலந்த ''தேங்காய்ப்பால் மீன் குழம்பு'' செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

அரிசி 1 கப்
துவரம் பருப்பு 1/2 கப்
சின்ன வெங்காயம் 8 to 10
தக்காளி 2
உருளைக்கிழங்கு 1
கத்திரிக்காய் 2
பீன்ஸ் 5
கேரட் 1
கடலை பருப்பு 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 1/2 ஸ்பூன்
வெந்தயம் 1/2 ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
தனியா 1 ஸ்பூன்
சோம்பு 1 ஸ்பூன்
கிராம்பு 1 ஸ்பூன்
நெல்லிக்காய் சைஸ் புளி
பச்சை மிளகாய் 1
வர மிளகாய் 5
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
பெருங்காய தூள் 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை ஒரு கொத்து
கொத்தமல்லி கையளவு
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு

சுள்ளுன்னு ஆளை இழுக்கும் சட்டி மீன் குழம்பு !


செய்முறை:

முதலில் அனைத்து காய்கறிகளையும் வெட்டி வைத்துக் கொள்ளவும். பின் புளியைக் கரைத்து புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு குக்கரை மிதமான சூட்டில் வைத்து அதில் அரிசி மற்றும் துவரம் பருப்பை அலசி போடவும். அடுத்து 5 கப் தண்ணீர் ஊற்றி சரியாக 4 முதல் 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

அரிசி வேகுவதற்குள் ஒரு கடாய் வைத்து அதில் 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். எண்ணெய்காய்ந்ததும் அதில் ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, தனியா, சோம்பு, மிளகு, கிராம்பு மற்றும் வர மிளகாய் சேர்த்து வறுக்கவும். பின்பு அடுப்பை ஆப் செய்து விட்டு அதை சிறிது நேரம் ஆற விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும். வெந்தயத்தை போட்டு நன்கு பொரியும் வரை வதக்கவும். வெந்தயம் பொரிந்த பின்பு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கி விட வேண்டும். பின் வெட்டி வைத்துள்ள தக்காளியை போட்டு அது நன்கு மசிந்த பின்பு காய்கறிகளை சேர்த்து 3 நிமிடம் வரை வதக்கவும்.

Chappathi With Kuruma : சப்பாத்திக்கு ஒரு புதுவித சைட் டிஸ் ''காலிப்ளவர் பட்டாணி குருமா''!

பின் மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விட்டு தேவையான உப்பு மற்றும் 4 கப் அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து மூடி போட்டு வேக விடவும். அடுத்து குக்கரை திறந்து சாதத்தை நன்கு கிளறி மசித்து வைத்துக் கொள்ளவும். பின்பு சாம்பார் பாத்திரத்தைத் திறந்து அதில் கரைத்து வைத்திருக்கும் புளித்தண்ணீர் சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை சாம்பாரை கொதிக்க வைக்கவும்.

பின் அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு மசித்து வைத்திருக்கும் சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து விட்டு அடுப்பை அணைத்து விடவும். பின் pan ல் சிறிது எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, 2 வர மிளகாய் , உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, மற்றும் பெருங்காய தூள் சேர்த்து தாளிக்கவும். இப்பொழுது சூடான , ஆரோக்கியமான மற்றும் சுவையான பிஸ்பிலா பாத் தயார். இதை வீட்டில செய்து பாருங்க.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios