வெஜ் புலா ஒரு முறை இப்படி செய்ங்க.. அடிக்கடி செய்வீங்க.. ரெசிபி இதோ!
Veg Pulao Recipe : குழந்தைகள் விரும்பி சாப்பிட வெஜ் புலாவ் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காய்கறி இருந்தால் வெஜ் புலாவ் செய்து சாப்பிடுங்கள். வெஜ் புலா செய்வதற்கு மிகவும் சுலபமாகவும், சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும். குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாக இதை செய்து கொடுங்கள், அவர்கள் அதை விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இப்போது இந்த பதிவில் வெஜ் புலாவ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: பன்னீரில் இப்படி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்.. ரெசிபி இதோ!
வெஜ் புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 1/2 கப்
காலிஃப்ளவர் - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 1/2 கப் (நறுக்கியது)
கேரட் - 1/4 கப் (நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1/4 கப்
குடைமிளகாய் - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5
பச்சை மிளகாய் - 2
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
பிரியாணி இலை - 1
கிராம்பு - 4
ஏலக்காய் - 3
பட்டை - 1 துண்டு
அன்னாச்சி பூ - 1 துண்டு
கொத்தமல்லி - சிறிதளவு
புதினா - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 1/4 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
நெய் - 3 ஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
இதையும் படிங்க: EGG Curry Recipe with Simple ingredients ஒருமுறை இப்படி முட்டை குழம்பு செஞ்சு கொடுங்க... தட்டு காலியாகும்!
செய்முறை:
வெஜ் புலாவ் செய்ய முதலில் பாஸ்மதி அரிசியை தண்ணீரில் நன்கு கழுவி பிறகு அதில் சுமார் 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து தானாக எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும், பெருஞ்சீரகம், பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை, அன்னாச்சி பூ ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அடுத்து அதில் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் அதில் தக்காளியையும் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.
அதன்பிறகு அதில் காய்கறிகள் எடுத்து வைத்த காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு அதில் அரிசியையும் சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு, பின் தேவையான அளவு தண்ணீரை ஊற்றவும். இதனுடன் எலுமிச்சை சாறையும் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பின் உப்பையும் சேர்த்து கிளறி விடுங்கள். இதனை அடுத்து ஒரு மூடியை வைத்து காற்று போகாதவாறு மூடி வைக்கவும். குறைவான தீயில் அடுப்பை வையுங்கள். சாதம் நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை சாதத்தின் மேல் தூவி விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் வெஜ் புலாவ் ரெடி..!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D