கறி குழம்பு சுவையை மிஞ்சும் சைவ கறி குழம்பு.. ஒருமுறை செய்ங்க அடிக்கடி செய்வீங்க!!

Saiva Curry Kulambu : இந்த கட்டுரையில் சைவ கறி குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

easy and tasty saiva curry kulambu in tamil mks

நீங்கள் சைவப்பிரியதா? அப்படியானால் உங்களுக்கான பதிவுதான் இது. ஆம், உங்களுக்காக இந்த பதிவில் கறி குழம்பு சுவையை மிஞ்சும் சுவையில் சைவ குழம்பு செய்வது பற்றி கொண்டு வந்துள்ளோம். இனி நீங்களும் கறி குழம்பு சாப்பிடலாம். இந்த சைவ கறி குழம்பை நீங்கள் சூடான சாதத்துடன் சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும் அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த குழம்பை நீங்கள் சாதம் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி போன்றவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம். முக்கியமாக இந்த குழம்பு செய்வது ரொம்பவே சுலபம். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் சைவ கறி குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
இலவங்கப்பட்டை - 1
நட்சத்திர சோம்பு - 1
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/2 ஸ்பூன்
தேங்காய் பால் - 1 கப்
உப்பு - சுவைக்கு ஏற்ப
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  10 நிமிடத்தில் சுவையான மோர் குழம்பு செய்ங்க.. ரெசிபி இதோ!

கறி செய்ய தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கப் (250 கிராம்)
மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/4 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - 2 ஸ்பூன்
தண்ணீர் - சிறிதளவு

இதையும் படிங்க:  கோழி குழம்பு சுவையில் கருப்பு கொண்டைக்கடலை குழம்பு... இப்படி செஞ்சு அசத்துங்க!

செய்முறை:

இந்த குழம்பு செய்ய முதலில் கறி தயாரிக்க ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், சீரகம், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளுங்கள். பிறகு அந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் உருட்டி வைத்த உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து, அதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

மறுபுறம் ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், சோம்பு, கிராம்பு, ஏலக்காய், பட்டை , நட்சத்திர சோம்பு ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாயையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் வதங்கியவுடன் இப்போது அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் இதில் பொடியாக நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி குழைந்ததும் அதில் கரம் மசாலாத்தூள், மல்லி தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பிறகு இதில் தேங்காய்ப்பால் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். குழம்பு ஒருமுறை கொதித்ததும் அதில் பொரித்து வைத்த உருண்டையை இதில் சேர்த்து மீண்டும் ஒரு முறை கொதிக்க வைக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லியை தூவுங்கள். அவ்வளவுதான் சும்மா அட்டகாசமான சைவ கறி குழம்பு ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை உங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios