சுவையான தேங்காய் பால் குழம்பு செஞ்சி சாப்பிடுங்க.. ரெசிபி இதோ..!
Coconut Milk Kulambu Recipe : இந்த பதிவில், அனைவரும் விரும்பி சாப்பிடும் தேங்காய் பால் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் தேங்காய் பால் குழம்பு சாப்பிட்டு இருக்கிறீர்களா..? ஒருவேளை அப்படி சாப்பிடவில்லை என்றால், கண்டிப்பாக ஒருமுறையாவது இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். சுவையை அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக, இந்த ரெசிபி செய்வதற்கு ரொம்பவே சுலபமாக இருக்கும். மேலும், இதில் காய்கறிகள் சேர்த்து செய்வதால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. சரி வாங்க.. இப்போது இந்த பதிவில், தேங்காய் பால் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: இறால் முட்டை மசாலா ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்.. ரெசிபி இதோ..!
தேங்காய் பால் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1
உருளைக்கிழங்கு - 4 (நறுக்கியது)
கத்தரிக்காய் - 4 (நறுக்கியது)
முருங்கைக்காய் - 1 (நறுக்கியது)
எலுமிச்சை - 1/2
பூண்டு - 1
மிளகாய் - 4
மல்லி தூள் - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: EGG Curry Recipe with Simple ingredients ஒருமுறை இப்படி முட்டை குழம்பு செஞ்சு கொடுங்க... தட்டு காலியாகும்!
செய்முறை:
தேங்காய் பால் குழம்பு செய்ய முதலில், எடுத்து வைத்த தேங்காவை துருவி, தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு மீண்டும் அதில் தண்ணீர் ஊற்றி, இரண்டாவது முறையாக எடுத்த பாலை தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் மிளகாய், மல்லி, சீரகம், சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பேஸ்ட் போல் அரைக்கவும். இந்த பேஸ்ட்டை இரண்டாவது முறையாக அரைத்த தேங்காய் பாலில் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு அதில், நறுக்கிய முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, ஆகியவற்றை சேர்க்கவும். இதனுடன், உங்கள் சுவைக்கு ஏற்ப உப்பும் சேர்த்து அடுப்பில் வேக வைக்கவும். காய்கறிகள் நன்றாக வெந்ததும், அதில் முதன்முதலாக அரைத்து எடுத்த தேங்காய் பாலை ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு இதனுடன் மஞ்சள் தூளையும் சேர்த்து நன்றாக கொதிக்க வையுங்கள்.
ஒரு கடையை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பிறகு, இதில் தயாரித்து வைத்த குழம்பை அதில் ஊற்றவும். இறுதியாக, அதில் எலுமிச்சையை பிழிந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் பால் குழம்பு தயார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D