1 கப் ரவை இருக்கா..? காலை டிபனுக்கு குழந்தைகளுக்கு பிடிச்ச பன் தோசை செஞ்சி கொடுங்க.. 

Bun Dosa Recipe : இந்த பதிவில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பன் தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

easy and tasty bun dosa recipe in tamil mks

தினமும் காலையில் அரிசி மாவில் செய்த தோசை சாப்பிட்டு போரடித்து விட்டதா..? அப்படியானால் உங்கள் வீட்டில் ரவை இருந்தால் அதில் பன் தோசை செய்து சாப்பிடுங்கள். இந்த பன் தோசை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இந்த தோசை சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும். குறிப்பாக வீட்டில் இருக்கும் குழந்தைகள் இந்த தோசையை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த தோசையுடன் நீங்கள் தேங்காய் சட்னி அல்லது கார சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். சரி வாங்க இப்போது இந்த பதிவில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பன் தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  உங்க வீட்ல கொண்டக்கடலை இருக்கா?! உடனே இப்படி தோசை செய்ங்க.. எக்கச்சக்க சத்துக்கள் இருக்கு!

பன் தோசை செய்ய தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
பச்சரிசி - 2 ஸ்பூன்
புளித்த தயிர் - 1/4 ஸ்பூன்
சோடா உப்பு - 2 சிட்டிகை
கடுகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - சின்ன துண்டு
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  மீந்துபோன இட்லியில் ஒரு முறை இப்படி டிபன் செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க!

செய்முறை:
பன் தோசை செய்ய முதலில், அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்க்க ஒருமுறை வதக்கிக் கொள்ளுங்கள்.  இதனை அடுத்து, அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தையும், சிறிதளவு உப்பையும் சேர்க்கவும் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையையும் சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு, பின் அடுப்பில் இருந்து கடை இறக்கி விடுங்கள்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்த ரவை, பச்சரிசி, புளித்த தயிர், தோசை சுடுவதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு இந்த மாவுடன் வதக்கி வைத்த பொருட்களை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு ஒரு தட்டால் பாத்திரத்தை மூடி சுமார் 15 நிமிடம் ஊற வையுங்கள்.

15 நிமிடம் கழித்து அந்த மாவில் சோடா உப்பு சேர்த்து ஒரு முறை நன்கு கலக்கவும். மாவு ரொம்பவே கெட்டியாக இருந்தால் அதில் சிறிது அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஆப்பக் கடாயை வைத்து அதில் சூடானதும் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். பிறகு அதில் தயாரித்து வைத்த மாவை ஒரு கரண்டி ஊற்றுங்கள் தோசை மாவை பரப்புவது போல் பரப்பாமல் அப்படியே ஊற்ற வேண்டும். பின் ஒரு மூடி வைத்து மிதமான சூட்டில் சுமார் மூன்று நிமிடம் வேக வையுங்கள். பிறகு திருப்பி போட்டு மறுபுறமும் வேக வையுங்கள். அவ்வளவுதான் பஞ்சு போன்ற மிருதுவான சுவையான ருசியில் பன் தோசை தயார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios