2 கப் அவள் இருக்கா? அப்ப அதில் உப்புமா செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்டா இருக்கும்!
Aval Upma Recipe : இந்த கட்டுரையில் அவள் உப்புமா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
தினமும் காலை இட்லி, தோசை சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? வித்தியாசமான சுவையில் சத்தானது ஏதாவது சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் அவள் இருந்தால் அதை கொண்டு உப்புமா செய்து சாப்பிடுங்கள். இந்த அவள் உப்புமா வழக்கம் போல இல்லாமல் சாப்பிடுவதற்கு சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். முக்கியமாக இந்த அவல் உப்புமா செய்வது ரொம்பவே ஈசி. சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் அவல் உப்புமா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: காலை டிபனுக்கு 10 நிமிடத்தில் சத்தான ஓட்ஸ் உப்புமா ரெடி..!!
அவல் உப்புமா செய்ய தேவையான பொருட்கள் :
அவல் - 2 கப்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
தேங்காய் - 2 ஸ்பூன் (துருவியது)
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
வேர்க்கடலை - 3 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
இதையும் படிங்க: காலையில சத்தான உணவு சாப்பிட விரும்பினால் ராகி மாவில் இந்த டிபன் செய்ங்க... டேஸ்டா இருக்கும்!
செய்முறை :
முதலில் அவளை தண்ணீரில் நன்கு கழுவி பிறகு அதை ஊற வைக்கவும். இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானது வேர்க்கடலை, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு அதில் அவலை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். சிறிது நேரம் கழித்து துருவிய தேங்காயை இதனுடன் சேர்த்து நான்கு கிளறி விடுங்கள். பிறகு ஒரு தட்டை வைத்து சுமார் 2 நிமிடம் மூடி வைத்து பிறகு கிளறி விடுங்கள். இறுதியாக எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி இலை தூவி கிளறிவிடுங்கள். அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் அவல் உப்புமா ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D