Asianet News TamilAsianet News Tamil

சங்குப் பூ தேநீர் குடிச்சிப் பாருங்க: ஆரோக்கிய நன்மைகளை அனுபவியுங்க!

மூலிகை மருத்துவத்தில் அனைத்து வகையான நோய்களையும் எளிதில் தீர்க்கும் பல மூலிகைச் செடி, கொடிகள் உள்ளன. அதில் ஒன்று தான் நீல சங்குப் பூ கொடி. பூஜைகளில் பயன்படுத்தப்படும் சங்குப் பூவில் அளப்பரிய மருத்துவ குணங்கள் உள்ளன. அதிலும் மிகச் சிறப்பு என்னவென்றால், நினைவாற்றலை அதிகரிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. சங்குப் பூவில் தேநீர் செய்தும் குடிக்கலாம்.

 

Drink Conch Flower Tea: Enjoy the Health Benefits!
Author
First Published Sep 29, 2022, 7:51 PM IST

சங்குப் பூ

சங்குப் பூ தேநீரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது உடல் வலி மற்றும் வீக்கம் ஆகிய இரண்டையும் குறைக்கிறது. நாள்பட்ட சோர்வால் அவதிப்படுபவர்களுக்கு சங்குப் பூ  தேநீர் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

இந்த தேநீரில் வலி நிவாரணி பண்புகள் அதிகம் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சங்குப் பூ தேநீர் நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாக பயன்படுகிறது. இது, இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் உதவுகிறது.  மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவுகிறது. மன அழுத்தம் அல்லது கவலை மற்றும் தூக்கம் மிக கடினமாக இருந்தால், சில நாட்களுக்கு தினமும் சங்குப் பூ தேநீர் குடிக்கலாம். இது மூளையின் செயல்பாடு மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.

சங்குப் பூ, ஆஸ்துமா எதிர்ப்பு பண்புகளை  கொண்டுள்ளதால் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் சளி போன்ற அனைத்து விதமான சுவாசப் பிரச்சனைகளின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சங்குப் பூ சருமப் பாதுகாப்பிற்கும் பயன்படுகிறது.

சங்குப் பூ தேநீர் வயிற்றுப் புண்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. சங்குப் பூக்களை கொண்டு தயாரிக்கப்படும் தேநீர், அல்சர் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால், வயிற்றுப் புண் இருந்தால், எலுமிச்சை சாறு சேர்க்காமல் இந்த தேநீரை உட்கொள்ளலாம்.

சங்குப் பூ தேநீரில் இரத்த சர்க்கரையை குறைக்கும் தன்மை உள்ளதால், நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் போது கவனமுடன் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த தேநீர், நீரிழிவு மருந்துகளுடன் இணைந்து இரத்த சர்க்கரை அளவை கடுமையாக குறைத்து விடும். சங்குப் பூ தேநீரை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை மேற்கொண்டு, உடல் பிரச்னைக்கு தகுந்தாற்போல் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

Follow Us:
Download App:
  • android
  • ios