Bakrid 2023: உங்கள் ஈத் ஸ்பெஷலாக இருக்க.. செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா ரெசிபி இதோ..!!

பக்ரீத் என்றால் நாம் நினைவுக்கு வருவது மட்டன் பிரியாணி தான் ஆனால் இப்போது இப்பதிவில் நாம் செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் சுக்கா செய்வது எப்படி என்று குறித்து பார்க்கலாம்.

Bakrid 2023 chettinad style mutton chukka

ஈத் என்று சொல்லும் போது உங்கள் நினைவுக்கு வரும் முதல் விஷயம்  பிரியாணி தான். ஆனால் இத்தொகுப்பில் நாம் தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு பற்றி பார்க்கலாம். அசைவ பிரியர்கள் மத்தியில் அதற்கு தனி வரவேற்பு உண்டு. அது தான் மட்டன் சுக்கா. மட்டன் சுக்காவை நாம் சூடான சாதத்துடனும் மற்றும் சப்பாத்திக்கு சைடிஷ் ஆகவும்  சேர்த்து சாப்பிட்டலாம். அந்தவகையில் இத்தொகுப்பில் நாம் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா சமைப்பதற்கான குறிப்புகள் மற்றும் சுவையான செய்முறையை குறித்து காணலாம்.

செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா:

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 kg
சின்ன வெங்காயம் - 10 to 15
பூண்டு - 3
இஞ்சி- 1 துண்டு
 மிளகு - 1 கரண்டி
சீரகம் - 1 கரண்டி
மல்லி - 1 கரண்டி
கரம் மசாலா - 1/2 கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 கரண்டி
காஞ்ச மிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

Bakrid 2023 chettinad style mutton chukka

செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்முறை:

  • முதலில் மட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்து கொள்ளவும். பின் இஞ்சி பூண்டை பேஸ்ட் அரைத்து வைத்து கொள்ளவும். அதுபோலவே, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்து கொள்ளவும்.
  • இதனையடுத்து, குக்கரை அடுப்பில் வைக்கவும். குக்கர் சூடானதும் அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சுட்டானதும்,  அதில் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டவும். அதனுடன் மஞ்சள் தூளையும் சேர்த்து வதக்கவும். பின்பு அதில் நாம் கழுவி வைத்திருக்கும் மட்டனை சேர்க்கவும். மட்டனில் இஞ்சி பூண்டு பேஸ்டு ஒட்டுமாறு சுமார் கிளறி விடவும். பின் குக்கரை மூடி சுமார் 5 நிமிடம் வரை மட்டனை வேக வைக்கவும். 5 நிமிடத்திற்கு பிறகு குக்கரின் மூடியை திறக்கவும். மட்டனில் நன்றாக தண்ணீர் விட்டு இருக்கும். அதன் பின் அதில்  நாம் தேவையான அளவு தண்ணீர், உப்பு, மற்றும் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் குக்கரை மூடிக் கொள்ளவும். சுமார் 15 நிமிடம் வரை வேக வைக்கவும். நாம் ஏற்கனவே மட்டனை வேக வைத்ததால் இப்போது மட்டன் 90 விழுக்காடு மட்டும் வெந்தால் போதும்.
  • குக்கரில் இருக்கும் மட்டன் வேகுவதற்குள், ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் மிளகு, சீரகம், மல்லி, மற்றும் காஞ்ச மிளகாயை போட்டு அது நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.
  • பின் அதை சிறிது நேரம் ஆற விட்டவும். நன்கு ஆறிய பின் அவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். 

இதையும் படிங்க: Bakrid 2023: சவுதி அரேபியா, சிங்கப்பூர், எந்தெந்த நாட்டில் எப்போது பக்ரீத் பண்டிகை கொண்டாடுவார்கள் தெரியுமா?

  • 15 நிமிடம் ஆனதும் அடுப்பு அனைத்து அணைக்க வேண்டும். 90 விழுக்காடு மட்டன் நன்கு வெந்து இருக்கும்.vஒரு வேளை குக்கரில் மட்டன் வேக வைக்கும் போது அதில் தண்ணீர் அதிகமாக இருந்தால் அதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  • இப்போது ஒரு பாத்திரம் எடுத்துக் கொள்ளவும் அதை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும் என்னை நன்கு சுட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டுக் நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கிய பின் அதில் சிறிதளவு கருவேப்பிலை காஞ்ச மிளகாய் மேலும் அதில் நாம் வேகவைத்த மட்டனை சேர்த்து கிளறி விட்டு, வேக விடவும். தனியாக பாத்திரத்தில் எடுத்து வைத்திருந்த தண்ணீரை இப்போது இதில் சேர்க்க வேண்டும்.
  • அதன் பின் அதில், கரம் மசாலா மற்றும் நாம் அரைத்து வைத்திருந்த மசாலைவை இதில் சேர்த்து நன்கு கிளறி விட்டவும். பின் பாத்திரத்தை  மூடி போட்டு மூடவும். அடுப்பை முற்றிலுமாக குறைத்து வைத்து அதை சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை வேக வைக்கவும். 10 நிமிடத்திற்கு பிறகு அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். இப்போது சுவையான செட்டிநாடு மட்டன் சுக்கா ரெடி. இந்த பக்ரீத் நாளில் செட்டிநாடு மட்டன் சுக்காவை கண்டிப்பாக வீட்டில் செய்து, உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios