நடிகை சினேகாவின் உணவு, உடற்பயிற்சி வழக்கம் குறித்த சில தகவல்களை இங்கு காணலாம்.
தமிழ் சினிமா ரசிகர்களை தன் புன்னகையால் கவர்ந்தவர் நடிகை சினேகா. பல புதுமுக நடிகைகள் வந்தாலும் அவரது புன்னகைக்கு இன்றும் மவுசு இருக்கிறது. இவர் தன் இளமையான தோற்றத்திற்கு சில விஷயங்களை கறாராக பின்பற்றுகிறாராம். அவர் எந்த உணவையும் ஒதுக்குவதில்லையாம். ஆனால் சில கட்டுப்பாடுகள் வைத்திருக்கிறார். 43 வயதான சினேகா, பார்ப்பதற்கு அப்படி தெரிவதில்லை. அவருடைய ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் அவர் பின்பற்றும் பழக்கங்களை இங்கு காணலாம்.
உடற்பயிற்சி
சினேகா சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்துவருகிறார். யோகா, ஹிட் என்ற தீவிர பயிற்சிகள், வலிமை பயிற்சிகள், ஏரோபிக்ஸ் போன்றவை அவரது தினசரி பழக்கங்களில் ஒன்றாகும். எடைகளை தூக்கி பயிற்சி செய்ய தொடங்கிய பின் தான் வலிமையாக உணர்வதாக அவர் கூறியுள்ளார்.
உணவு பழக்கம்
நடிகை சினேகா எந்த உணவையும் சாப்பிடாமல் தவிர்ப்பது இல்லையாம். இவர் அனைத்து உணவுகளையும் சாப்பிடுபவர். ஆனால் எவ்வளவு கலோரிகள் உண்கிறார் என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறார். அதிகமான கலோரிகளை தவிர்க்கிறார். அவரின் உடலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது சர்க்கரை உட்கொள்ளலை குறைத்ததுதான். இவர் ஒரு மாதத்தில் ஒரே ஒருமுறை தவிர மற்ற நாட்களில் சர்க்கரையை எடுத்துக் கொள்வதே இல்லையாம். சர்க்கரையை உட்கொள்ளலை குறைத்த பிறகு அவருடைய உடலில் பல்வேறு மாற்றங்களை உணர்ந்துள்ளார். அவருடைய உணவில் அளவான கார்போஹைட்ரேட், உடலுக்கு தேவையான தாதுக்கள், செரிமானத்திற்கு ஏற்ற நார்ச்சத்து, தசைகளுக்கான புரதம் ஆகியவற்றை சரிவிகிதத்தில் எடுத்துக் கொள்கிறார். இதில் அளவான மசாலா, குறைவான உப்பு தான் சேர்த்துக் கொள்கிறாராம்.
நடிகை சினேகா சொன்னவற்றில் சர்க்கரையை தவிர்ப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும். இதனால் அவருடைய உடலில் எடை குறைப்பு செயல்பாடு நல்ல முன்னேற்றம் கண்டிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
சர்க்கரையை ஏன் தவிர்க்க வேண்டும்? எடையை குறைக்க நினைப்பவர்கள் தங்களுடைய உணவு பழக்கத்தில் சர்க்கரையை நீக்குவது மிகுந்த பலன் அளிக்கும். வெள்ளை சர்க்கரை மட்டுமல்ல; பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை கலந்த பானங்கள் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது. சர்க்கரை கலந்த உணவுகள் எடுத்துக் கொள்ளும் போது அவை ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அதிகரிக்கின்றன. இதனால் சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் கொழுப்பு சேமிப்பு ஆரம்பிக்கும். சிறிது நேரத்தில் பசியும் அதிகரிக்கும். ஆனால் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் சர்க்கரை சேர்த்துக் கொள்ளாதபோது பசி அடங்குகிறது. அதிக நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். மூளை நன்றாக செயல்படும். இரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிக்காது.
சினேகாவின் பிட்னஸ் சீக்ரெட்
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சர்க்கரையை உணவில் இருந்து நீக்குவது மிகவும் நல்லது. சினேகாவின் கவர்ச்சிகரமான அழகுக்கு அவரது ஆரோக்கியமான உணவு பழக்கம் முக்கிய காரணமாகும். சினேகா மாதம் ஒருமுறை மட்டுமே சர்க்கரை எடுத்துக் கொள்கிறார். இது அவருடைய பிட்னஸில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. போதுமான உடற்பயிற்சியும், சர்க்கரை இல்லாத வாழ்க்கை முறையும் நடிகை சினேகாவின் அழகை பொக்கிஷமாக பராமரிக்க உதவுகிறது.
