விந்துணுவை முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!!

விந்துணுவை முகத்துக்கு ஃபேஸ்பேக்காக செய்து பூசிக்கொள்வதால், சருமத்துக்கு பல்வேறு நண்மைகள் கிடைப்பதாக தோல் மருத்துவர் பலர் கருத்து தெரிவித்துள்ளது உலகையே வியப்படையச் செய்துள்ளது.
 

benefits and side effects of semen facial expert views

ஹாலிவுட் சினிமாவின் போற்றப்படக்கூடிய நடிகைகளான க்வினெத் பேல்ட்ரோ மற்றும் ஸ்டெல்லா மெக்கார்ட்னி போன்ற பிரபலங்களுக்கு ஊட்டச்சத்து நிபுணராக இருந்தவர் செல்சி லூயிஸ். இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஃபேஸ்புக்கில், விந்துணு ஃபேஸ்பேக்கை பயன்படுத்தி வருவதால் தனது சருமம் பொலிவடைந்துவிட்டதாகவும், அதன்மூலம் தோலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதாகவும் பதிவிட்டு இருந்தார். இப்பதிவு ஒட்டுமொத்த உலகையும் ஆச்சரியப்படுத்தியது.  பலருக்கும் இந்த கருத்து சுகாதாரமற்றதாக தோன்றலாம். ஆனால் இதை பல சரும நிபுணர்களும் ஆதரிப்பது தான், ஆச்சரியத்தில் ஆச்சரியமாகும். 

இதுதொடர்பாக டெய்லி மெயில் பத்திரிக்கையில் வெளியான செய்தியில், விந்துணுவை ஃபேஸ்பேக்காக பயன்படுத்துவதன் மூலம் கரும்புள்ளிகள், முகப்பரு மற்றும் சுருக்கங்களைக் குறைக்கலாம். இவை அனைத்தும் சருமத்திற்கு நன்மை பயக்கும். விந்தணு ஃபேஸ்பேக் ஆண்டிஆக்சிடண்டாக செயல்படும் என்று தகவல் கூறியிருந்தது. விந்தணுவின் புரத உள்ளடக்கம் சருமத்திற்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் அறிவியல் அதை ஆதரிக்கிறதா? தோலில் விந்துவை வைக்கும் யோசனையை ஆதரிக்க அதிக அறிவியல் சான்றுகள் இல்லை என்பதே உண்மை.

உங்களுடைய துணை தூக்கத்தில் உடலுறவு கொள்கிறாரா? அப்போது இந்த பாதிப்பாக இருக்கலாம்..

முகத்தில் விந்தணுவை வைப்பது என்பது பலருக்கும் அருவறுப்பாக தோன்றலாம். ஆனால் பலரும் இந்த ஃபேஷியலை மிகவும் தீவிரமாக செய்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. விந்து ஃபேஷியல் என்பது 30 நிமிட செயல்முறையாகும், இதில் புதிய விந்துவை முகத்தில் தேய்த்து விடுவார்கள். அதை சருமம் உறிஞ்சுவதற்கு 20 நிமிடங்கள் கொடுக்கப்படும். அதையடுத்து 
குளிர்ந்த நீரில் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும். நறுமணமுள்ள ஈரமான திசுக்களால் முகத்தை துடைப்பதன் மூலம் சருமம் பொலிவடைகிறது.

புரோஸ்டேட் மற்றும் வெசிகல்ஸ் போன்ற பல்வேறு சுரப்பிகளில் இருந்து திரவங்களின் கலவை தான் விந்தணு. அது பார்ப்பதற்கு மஞ்சளும் வெள்ளையும் கலந்து இருக்கும். அதில் யூரியா, பிரக்டோஸ், லாக்டிக் அமிலம்,விந்தணு நொதி, டெஸ்டோஸ்டிரோன் உள்ளிட்ட கூறுகள் உள்ளன. விந்துவில் மல்டிவைட்டமின்கள் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன, இது சருமத்தை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்கும்.

எனினும் இந்த செயல்முறையில் சில எதிர்மறை விளைவுகளும் இல்லாமல் இல்லை. ஒருவேளை உங்களுக்கு கிடைக்கும் விந்தணுவில் ஏதேனும் நோய் பாதிப்பு இருந்தால், அதன்மூலம் மஞ்சள் காமாலை பிரச்னை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளின் ஆபத்தும் இதில் அடங்கியுள்ளது. சொறி, அரிப்பு மற்றும் முகம் சிவந்து போதல் உள்ளிட்ட ஒவ்வாமையும் ஏற்படலாம். குறிப்பாக விந்தணு ஃபேஸ்பேக்கால்  உணர்திறன், எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு முகப்பருவை அதிகரிக்கலாம். அதனால் இந்த செயல்முறைக்கு செல்லும் முன், முறையாக மருத்துவரிடம் கலந்தாலோசித்துவிட்டு செல்லுங்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios