சிங்கப்பூரில் தேசிய தின கோலாகலம்! கண்களுக்கு விருந்தளிக்கும் உணவுகள்!
தேசிய தினம் என்றாலே நினைவு வருவது அணிவகுப்பு, வாணவேடிக்கை, தேசிய கீதம், தேசியக் கொடி அவ்வளவுதான். ஆனால் சிங்கப்பூரில் உணவுகளிலும் தேசிய தினம் எதிரொலிக்கிறது.
சிங்கப்பூர் நாட்டின் தேசிய தினம் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வரும் 8ம் தேதி இரவு அந்நாட்டு மக்களுகாக பிரதமர் லீ சியன் லூங் உரையாற்றுகிறார். அதன் தமிழாக்கத்தை அந்நாட்டு சட்டத்துறை அமைச்சரும், பூர்வாங்க தமிழருமான கா.சண்முகம் தமிழில் வாசிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Singapore National day food
இதையொட்டி நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. சிங்கப்பூரில் உணவுகளிலும் தேசிய தினம் எதிரொலிக்கிறது. பண்டோங்கால் Milkshake பானம் தேசியக் கொடியின் அம்சங்களைப் பிரதிபலிக்கிறது. நட்சத்திரங்கள், நிலா, ஆகியவற்றுடன் அலங்கரிக்கப்பட்ட இந்த பானம் பண்டோங்கால் செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் பலரால் விரும்பப்படும் Ice Kachang-ன் தின்பண்டத்தை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த Memories Tart. (மெமோரிஸ் டார்ட்) பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், இதில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருள்கள் Ice Kachang-ன் தின்பண்டத்தில் இடம்பெறுபவை.
ஹைனானீஸ் கோழிச்சோறு (Hainanese Chicken Rice) மற்றும் பிஸாவைத் (Pizza) இனைந்த கலவையாக தேசிய தினத்தை முன்னிட்டுப் புது வகையான பிஸா இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நெருங்கி வரும் சிங்கப்பூர் தேசிய தினம்! - களைகட்டும் கொண்டாட்டங்கள்!
சிங்கப்பூரில் தேசிய தினத்துக்காகவே சிறப்பாக தயாரிக்கப்பட்ட கேக்தான் இது. இதில், டுரியன் (Durian) செண்டொல் (Chendol) பாண்டான் (Pandan) போன்ற சுவைகளை கொண்டுள்ளது.
சிங்கப்பூரின் வெவ்வேறு கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் ஒவ்வோர் உணவுப் பொருளையும் இந்த கேக்கின் ஓர் அங்கமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐ லவ் சிங்கப்பூர்! 58வது தேசிய தினம் கொண்டாட தயாராகும் சிங்கை மக்கள்!